100 சதவீத தேர்ச்சிக்காக நெருக்கடி: தனியார் பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 4, 2022

100 சதவீத தேர்ச்சிக்காக நெருக்கடி: தனியார் பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி!

Students are shocked that some schools have imposed restrictions on students who score low on diversion exams and school exams, as they are not given 'hall tickets' for the general exam.

It is also alleged that this measure is being taken to show 100% proficiency. 26 lakh students are scheduled to appear for the general examination. The Department of School Education is making arrangements for the examination. A diversion selection for plus 1 is going on. The Department of Education has instructed schools to give students the scores of these exams and encourage them to prepare for the general exam.

Parents claim that the restrictions stipulate that students must score at least 60 to 80 percent in these exams. Students have been informed on behalf of some schools that they will be shown as 'absent' students. Schools are taking this step to show a 5 percent proficiency. So, can students who are in a position to take low marks, write the general exam by themselves? They are afraid that this year's study will be wasted. There has been a call for school education officials to intervene in this matter and issue hall tickets to all schools without leaving any students behind and take action against those who spread the rumor. Spread.

As a culmination of this, rumors spread on social media yesterday that the school education department had announced that there would be no exams for students in grades one to five this year, causing confusion among parents and students alike. Teachers and school administration who prepared the students for the year-end exam were shocked.

In this case, the rumors circulating about the exam; The Department of Education yesterday announced that the general examination will be held as planned for all students from one to plus two. If necessary, the school authorities have decided to take criminal action against them through the police. திருப்புதல் தேர்வுகளிலும், பள்ளியில் நடத்தப்படும் தேர்வுகளிலும், குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படாது என, சில பள்ளிகள் கட்டுப்பாடு விதித்துள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்

.நுாறு சதவீத தேர்ச்சியை காட்டுவதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.திருப்புதல் தேர்வு தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2மாணவர்களுக்கு, மே 5 முதல் பொது தேர்வுகள் துவங்குகின்றன. பொதுத்தேர்வை, 26 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது.அதேநேரத்தில், ௧௦ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகளை பள்ளிக்கல்வி துறை நடத்தியுள்ளது. பிளஸ் 1க்கும் ஒரு திருப்புதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுகளின் மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களை பொதுத்தேர்வுக்கு தயாராகும்படி உற்சாகமூட்ட, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.'ஆப்சென்ட்'இந்நிலையில், சில தனியார் பள்ளிகளில், அரசின் திருப்புதல் தேர்வுகள் மட்டுமின்றி, பள்ளி அளவிலும் தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில் மாணவ - மாணவியர் குறைந்தபட்சம், 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என, கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.பள்ளிகள் குறிப்பிடும் மதிப்பெண்ணை பெற முடியாத மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படாது; அவர்கள், 'ஆப்சென்ட்' மாணவர்களாக காட்டப்படுவர் என, சில பள்ளிகள் தரப்பில் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், ௧௦௦ சதவீத தேர்ச்சியை காட்டுவதற்காக, இந்த நடவடிக்கையை எடுக்கின்றன. அதனால், மதிப்பெண் குறைவாக எடுக்கும் நிலையில் உள்ள மாணவர்கள், தங்களால் பொதுத்தேர்வு எழுத முடியுமா? இந்த ஆண்டு படிப்பு வீணாகிவிடுமோ என, அச்சமடைந்து உள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வி அதிகாரிகள் தலையிட்டு, அனைத்து பள்ளிகளிலும், எந்த மாணவரும் விடுபடாமல் ஹால் டிக்கெட் வழங்கி, அவர்களை பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை பள்ளிக் கல்வி துறையின் தேர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து, சமூக வலைதளங்களிலும், சில ஊடகங்களிலும், அவ்வப்போது தவறான தகவல்களும், வதந்திகளும் பரவுகின்றன. இதன் உச்சகட்டமாக ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த ஆண்டு தேர்வு கிடையாது என, பள்ளிக்கல்வி துறை அறிவித்ததாக, நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.இதனால், பெற்றோர், மாணவர்கள்கடும் குழப்பம் அடைந்தனர். ஆண்டு இறுதி தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்து வந்த ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், தேர்வு குறித்து பரவிய தகவல்கள் வதந்தி; ஒன்று முதல் பிளஸ் 2 வரை, எல்லா மாணவர்களுக்கும் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை நேற்று அறிவித்தது.மேலும், தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்ததாக, வதந்திகளை பரப்பி, பெற்றோரை குழப்பம் அடைய செய்தவர்கள் யார் என்ற விசாரணையும் துவங்கி உள்ளது. தேவைப்பட்டால், அவர்கள் மீது போலீஸ் வாயிலாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், பள்ளிக்கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.