கணினி வழி போட்டி தேர்வு ; TNPSC அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 4, 2022

கணினி வழி போட்டி தேர்வு ; TNPSC அறிவிப்பு

The Tamil Nadu Civil Service Selection Board has, for the first time, announced a computerized competitive examination for the post of District Child Protection Officer.

A competitive examination has been announced on behalf of DNPSC to fill 16 vacancies in the post of District Child Protection Officer under the Department of Social Security, Tamil Nadu. The exam will take place via computer on the morning and afternoon of June 19th. Online application registration for the exam has started; Coming up, you can apply until the 30th.

Examination centers will be set up in Chennai, Madurai, Coimbatore, Trichy and Tirunelveli only. To appear for this examination, one must have completed a Bachelor's degree in Sociology, Social Work, Psychology, Child Development or Criminology or any other subject from a recognized university. Will be given.

Reservation candidates who wish to appear for this examination should not have attained the age of 60 years as on July 1 this year. Must be below 32 years of age for non-reserved category. .For the first time, a computerized competitive examination for a government post has been announced on a trial basis. Depending on the success of the exam, subsequent exams are to be conducted as a computer based exam. Further details can be found at DNPSC, www.tnpsc.gov.in/

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், முதல் முறையாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு, கணினி வழி போட்டி தேர்வை அறிவித்துள்ளது.

தமிழக சமூக பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவியில், 16 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்வு ஜூன் 19 காலை மற்றும் பிற்பகலில் கணினி வழியே நடக்கும். தேர்வில் பங்கேற்க ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு துவங்கி விட்டது; வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும், தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இந்த தேர்வில் பங்கேற்க, இளநிலை பட்டப் படிப்பில், சமூகவியல், சமூக பணி, உளவியல், குழந்தைகள் மேம்பாடு அல்லது குற்றவியல் ஆகியவற்றில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறுவோருக்கு, குறைந்தபட்சம், 56 ஆயிரத்து 100 ரூபாய் முதல் அதிகபட்சம் 2.05 லட்சம் ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் இட ஒதுக்கீட்டு பிரிவினர், இந்த ஆண்டு ஜூலை 1 கணக்கின்படி, 60 வயதை எட்டியிருக்கக் கூடாது. இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினருக்கு 32 வயது நிறைந்திருக்கக் கூடாது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில் அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் மட்டும், கணினி வழியில் இதுவரை நடத்தப்பட்டது

.முதல் முறையாக அரசு பதவிக்கான கணினி வழி போட்டி தேர்வு, பரீட்சார்த்த முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் வெற்றியை பொறுத்து, அடுத்தடுத்த தேர்வுகள் கணினி வழி தேர்வாக நடத்தப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.