முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 25, 2022

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

The Chief Minister's State Youth Award 2022 will be presented by the Chief Minister of Tamil Nadu on Independence Day on August 15 with a cash prize of Rs. 1 lakh, a certificate and a medal. Men and women between the ages of 15 and 35 can apply for this award. Must be 15 years of age on 01.04.2022 and under 35 years of age on 31.03.2022. Only services performed between 01.04.2021 to 31.03.2022 will be considered for this award.

Must have resided in Tamil Nadu for at least 5 years before applying for the award. Must have volunteered for the benefit of the community. Employees of Central and State Governments, Colleges and Schools are not eligible to apply for this award. Only one male and one female who have been reviewed by the selection committee and have rendered excellent service in it will be sent to the State Selection Committee. All applications should be submitted through the Commission's website www.sdat.tn.gov.in by 4 pm on May 10, said Collector Alby John Varghese. மாநில இளைஞர் விருது

முதலமைச்சரின் 2022ம் ஆண்டிற்கான மாநில இளைஞர் விருது ஆகஸ்டு மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சரால் ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகள் வழங்கப்படவுள்ளது. இவ்விருதிற்கு 15 வயது முதல் 35 வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2022 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.03.2022 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். இவ்விருதினை பெற 01.04.2021 முதல் 31.03.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மே 10 ம் தேதி கடைசி நாள்

விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வெண்டும். சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு அதில் சிறப்பாக சேவை புரிந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே மாநில தேர்வு குழுவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். விண்ணப்பங்கள் அனைத்தும் ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் மே 10 ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.