ஆசிரியர் பணி நியமனம்: 445 போலி விண்ணப்பதாரர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 25, 2022

ஆசிரியர் பணி நியமனம்: 445 போலி விண்ணப்பதாரர்கள்

Teacher Recruitment: 445 Fake Applicants in Bihar

The Department of Education has found that 445 applicants have cheated in the recruitment of primary school teachers in Bihar.

Frauds were discovered while checking the documents submitted by the applicants during the consultation.

A total of 1,377 people have been selected for the post of primary school teacher. In it, state education minister Vijay Kumar Chowdhury said the documents of 932 applicants were correct and the applications of the remaining 445 had submitted suspicious documents.

In this regard, he further said,

We have asked the authorities to fully check the documents of the suspects at the CDET and TED offices. Besides, we are advised to check their university documents as well.

In Gopalganj alone, a maximum of 223 applicants submitted forged documents and suspiciously fraudulent documents during the consultation. In addition, 80 candidates each from East and West Sambaran districts, 38 each from Madhubani, 15 each from Nalanda, 3 each from Muzaffarpur and Nawada, 2 each from Bhojpur and 1 each from Kathihar and Sitamarhi districts have applied.

If convicted, an FIR will be registered against them under sections of the IPC relating to loading and fraud, Chaudhry said.
ஆசிரியர் பணி நியமனம்: பிகாரில் 445 போலி விண்ணப்பதாரர்கள்

பிகாரில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் 445 விண்ணப்பதாரர்கள் மோசடி செய்துள்ளதாக கல்வித்துறை கண்டறிந்துள்ளது.

கலந்தாய்வின்போது விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணங்களைச் சரிபார்க்கும் போது மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கும் மொத்தம் 1,377 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், 932 விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் சரியாக இருப்பதாகவும், மீதமுள்ள 445 பேரின் விண்ணப்பம் சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததாகவும் மாநில கல்வி அமைச்சர் விஜய் குமார் சௌத்ரி தெரிவித்தார். இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது,

சி.டி.இ.டி மற்றும் டெட் அலுவலகங்களில் சந்தேகத்திற்குரியோர்களின் ஆவணங்களை முழுமையாகச் சரிபார்க்கும்படி அதிகாரிகளை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். தவிர, அவர்களின் பல்கலைக்கழக ஆவணங்களையும் சரிபார்க்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.

கோபால்கஞ்சில் மட்டும் அதிகபட்சமாக 223 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வின் போது போலி ஆவணங்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் மோசடி ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இதைத்தவிர, கிழக்கு மற்றும் மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் தலா 80 பேர், மதுபானியில் 38 பேர், நாலந்தாவில் 15 பேர், முசாபர்பூர் மற்றும் நவாடாவில் தலா 3 பேர், போஜ்பூரில் இருந்து 2 பேர், கதிஹார் மற்றும் சீதாமர்ஹி மாவட்டங்களிலிருந்து தலா ஒருவரும் விண்ணப்பித்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது ஏற்றுதல் மற்றும் மோசடி தொடர்புடைய ஐபிசி பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்றார் சௌத்ரி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.