திருவள்ளூர் மாவட்டத்தில் 10, 11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு 1.36 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 28, 2022

திருவள்ளூர் மாவட்டத்தில் 10, 11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு 1.36 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்

10, 11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு

கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக நேரடியாக நடத்தப்படாமல் இருந்த 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 441 மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 428 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ம் தேதி தொடங்கி, 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் - 23043, மாணவிகள் - 20606 என மொத்தம் - 43649 மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இத்தேர்வுக்காக 133 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1.36 லட்சம் மாணவ மாணவிகள்

இதேபோல், 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு, மே 10 ம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் - 21601, மாணவிகள் - 22484 என மொத்தம், 44 ஆயிரத்து 85 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வுக்காக 133 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மே 6 ஆம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் - 24288, மாணவிகள் - 24406 என மொத்தம் - 48694 பேர் எழுத உள்ளனர். இத்தேர்வுக்காக 175 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம்

இதில் 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்காக தலா 133 தேர்வு மையங்களும், பத்தாம் பொதுத் தேர்விற்காக 175 தேர்வு மையங்களும் என மொத்தம் 441 தேர்வு மையங்களும், மேல்நிலைத் தனித்தேர்வு எழுதுகிறவர்களுக்காக தனியாக, 9 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செய்முறைத் தேர்வு அந்தந்த தேர்வு மையங்களில் கடந்த 25ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருவதாக திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.