அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 11, 2026

அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!

Government Order issued providing guidelines for conducting transfer counseling for teachers and wardens of Government Kallar Reclamation Schools!


அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!

வெல்லும்

சுருக்கம் -

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் / விடுதிகள் - கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் - ஆசிரியர்கள் / காப்பாளர்கள், காப்பாளினிகள் - 2026-2027 - ஆம் கல்வியாண்டு முதல் பொதுமாறுதல் கலந்தாய்வு கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள்-ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல(பிந3(1)த் துறை அரசாணை (D) எண்.47

நாள்: 02.06.2026

பராபவ, வைகாசி-19

திருவள்ளுவர் ஆண்டு, 2057 படிக்கப்பட்டது:-

1. அரசாணை (19) எண்.65, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல (பிந3(1))த் துறை, நாள்:19.08.2024.

2. மிகப்பிற்படுத்தப்பட்டோர் ஆணையரின் மற்றும் சீர்மரபினர் நல கடித ந.க.எண்.பி2/2334496/2025, நாள்:06.05.2026. ஆணை:

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் / காப்பாளர் / காப்பாளினிகளுக்கு 2024-2025-ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.

2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்காக வெளிப்படையான, தெளிவான, ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்ற அரசின் முடிவிற்கேற்ப கள்ளர் 2 சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கும் / காப்பாளர் / காப்பாளினிகளுக்கு 2026-2027-ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதல் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அவர்கள் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார். 3. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து, கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் / காப்பாளர் / காப்பாளினிகளுக்கு 2026-2027-ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதல் வழங்குவதற்கு கீழ்க்காணும் நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டுமென்று அரசு ஆணையிடுகிறது.

பொது நிபந்தனைகள்

1. பணி ஓய்வு, பதவி உயர்வு, பணி துறப்பு, இறப்பு, பணி மாற்றம், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து காலிப்பணியிடங்களும் பொதுமாறுதல் பொதுமாறுதல் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட வேண்டும். கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் விடுதிகளில் உள்ள காப்பாளர் / காப்பாளினி பணியிடங்களை ஒருங்கிணைந்த காலிப்பணியிடங்களின் பட்டியல் கலந்தாய்வு நடைபெறும் நாளுக்கு முன்னர் தயாரிக்கப்பட வேண்டும். உள்ளடக்கிய

2. ஒவ்வொரு கல்வியாண்டிலும் கலந்தாய்வு நடைபெறக்கூடிய நாளுக்கு முன்னர் உள்ள கல்வியாண்டின் ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவரப்படி Educational Management Information System (EMIS) இல் உள்ள மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

3. கள்ளர் பள்ளிகளில் கலந்தாய்வானது, பணிநிரவல், ஆசிரியர்கள் மாறுதல்கள் அதனையொட்டி பதவி உயர்வு என்ற முறையில் நடைபெற வேண்டும்.

4. கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் பணிபுரிந்து வரும் காப்பாளர் / காப்பாளினிகள் அனைவருமே முதன் முதலில் இத்துறையில் ஆசிரியர்களாகவே பணி நியமனம் செய்யப்பட்டு, அதன் பின்பு 3 பணிமாறுதலில் காப்பாளர் / காப்பாளினியாக பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

5. அதே போல் கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் முதுநிலை, முன்னுரிமை, மற்றும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கள்ளர் விடுதியின் காப்பாளர் / காப்பாளினியாக பணியமர்த்தப்பட வேண்டும். 6. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களை உசிலம்பட்டி, சோழவந்தான் மற்றும் உத்தமபாளையம் சரகங்களில் உள்ள பணியிடங்களுக்குள்ளும், சரக மேற்பார்வையாளர்களை செக்கானூரணி, பெரியகுளம் மற்றும் திண்டுக்கல் சரகங்களில் உள்ள பணியிடங்களுக்குள்ளும் கட்டாய பணிமாறுதல் (Zero Counseling) செய்யப்பட வேண்டும். மேலும், மேற்படி சரகங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களின் பணி ஒய்வு / இறப்பு / பதவி உயர்வு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் காலிப்பணியிடங்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும்.

7. மாறுதல் வழங்கத் தகுதி வாய்ந்த அலுவலர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அவர்களால் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு இவ்வாணையிலுள்ள விதிமுறைகளை பின்பற்றி மாறுதல் வழங்கப்பட வேண்டும்.

மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அவர்களால் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி காப்பாளர் / காப்பாளினிகள், சரக மேற்பார்வையாளர்கள், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், இடைநிலை காப்பாளர் / காப்பாளினிகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு இவ்வாணையிலுள்ள விதிமுறைகளை பின்பற்றி மாறுதல் வழங்கப்பட வேண்டும்.

8. பணிநிரவலில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள (Surplus posts without teacher) காலிப்பணியிடங்களை மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் தொகுப்பிற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்பணியிடங்களுக்கு மாறுதல் வழங்குதல் கூடாது. 4 9. அ) உபரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நிரவல் (Deployment) செய்த பின்னரே பணி மாறுதல் / பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆ) உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்யும் போது, முற்றிலும் கண்பார்வையற்ற (Total Blindness) அனைத்து வகை ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995-இன்படி 40% மற்றும் அதற்கு மேலும் ஊனமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் NCC பொறுப்பில் உள்ளவர்கள் அவர்கள் விருப்பப்படியே தான் பணிபுரியும் இடத்திலேயே தொடர்ந்து பணி செய்ய முன்னுரிமை அளிக்கலாம். அவருக்குப் பதில் அப்பள்ளியில் பணியில் அடுத்த இளையவரை (Station Junior) பணிநிரவல் செய்யப்பட வேண்டும்.

10. ஒவ்வொரு கல்வியாண்டிலும் கலந்தாய்வு பொது மாறுதலானது மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் குறிப்பிடும் நாட்களில் நடைபெற வேண்டும். கலந்தாய்வு மற்றும் பொதுமாறுதல்கள் சார்ந்த நெறிமுறைகளுடன் கூடிய செய்திக் குறிப்பினை செய்தித்தாள்களில் கலந்தாய்விற்கு வெளியிட வேண்டும் (Wide publicity to be given in dailies).

முன்னரே 11. பொது மாறுதல்கள் கோரும் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் முறையாக EMIS இணையதளம் வழியாக (உரிய முன்னுரிமை சான்றிதழ்களுடன்) விண்ணப்பிக்க வேண்டும். முறையான விண்ணப்பம் இல்லாமல் எந்த மாறுதல் கோரிக்கைகளும் பரிசீலிக்கக்கூடாது. மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பற்றிய விவரங்கள் (ஆசிரியர் பெயர், மாறுதல் கோரியுள்ள இடம்) EMIS இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். 12. சிறப்பு நிகழ்வு:- கடந்த கலந்தாய்வு நடைபெற்ற நாளுக்குப் பின்னர், கணவன் அல்லது மனைவி திடீரென்று விபத்திலோ அல்லது நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தாலோ அல்லது பாதுகாப்பு துறையில் (Defence services) வீரமரணம் அடைந்தவரின் கணவன் / மனைவியாக இருந்தாலோ, அத்தகைய ஆசிரியர்கள் / காப்பாளர்கள் 1 காப்பாளினிகள் குறித்த நிகழ்வுகளில் கலந்தாய்வு குறித்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சிறப்பு நிகழ்வாகக் கருதி மாறுதல் வழங்கலாம்.

எனினும் இது குறித்து 5 மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையருக்கு ஒருங்கிணைந்த அறிக்கை அனுப்பப்படல் வேண்டும். 13. பணிக்காலம்:- (i) (1) (ii) மனமொத்த மாறுதல் மனமொத்த மாறுதல்களைப் பொறுத்தமட்டில் பொதுமாறுதல் கலந்தாய்வு நாளன்று மாறுதல் ஆணைகள் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே மனமொத்த மாறுதல் அடிப்படையில் மாறுதல் ஆணை பெற்றவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படக் கூடாது.

(2) மனமொத்த மாறுதல் அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்கப்படக் கூடாது.

(3) (4) மனமொத்த மாறுதல் பெறுவதற்கு தற்போது பணிபுரியும் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும். (கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்படும் நாளில்) மனமொத்த மாறுதல் தொடர்பான விண்ணப்பங்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்பட வேண்டும்.

புகார் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் நிருவாகக் காரணங்களுக்காக செய்யப்பட்டவர்கள், மாறுதல் கலந்தாய்வில் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கக் கூடாது.

(iii) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், சிறப்புத் தேர்வு மற்றும் நேரடி நியமனம் மூலமும் முறையாக நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் அனைத்து ஆசிரியர்களும் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

14. மாறுதல் கோரி பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களில் கீழ்க்காணும் இனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு பணியிடத்திற்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கோரினால் கீழ்க்காணும் 6 நெறிமுறைகளைக் கையாண்டு முன்னுரிமை வரிசையின் அடிப்படையில் மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டும்.

i. ii. iii. iv. V. vi. முற்றிலும் 100 % கண் பார்வையற்றவர்கள் (Total Blindness).

40% மற்றும் அதற்கு மேலே ஊனமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் பெற்றவர்கள் (Certified by Competent Authority) மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் உள்ள பெற்றோர் மற்றும் பெற்றோரை இழந்த மனவளர்ச்சி குன்றிய / மாற்றுத்திறனாளி குழந்தைகளின் சட்ட ரீதியான பாதுகாவலராக (Legal guardian) உள்ள ஆசிரியர்கள். அவ்வாறு உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995-இன்படி 40% மற்றும் அதற்கு மேலும் ஊனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதற்கான சான்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் பெறப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் (Kidney transplantation surgery), டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சை புற்றுநோய், மூளைக்கட்டி சிகிச்சை மற்றும் மேற்கொண்டவர்கள்.

பாதுகாப்புத் துறையில் (Defence Services) பணிபுரிந்து வருபவர்களின் கணவன் / மனைவி. விதவைகள் (widow) / மனைவியை இழந்த கணவன்கள் (widower) மற்றும் 40 வயதைக் கடந்த திருமணம் செய்து கொள்ளாத முதிர்கன்னியர் மற்றும் சட்டப்படி விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள்.

vii. கணவன் (அல்லது) மனைவி பணிபுரிவர்கள் (Spouse Employed), கணவர் பணிபுரியும் இடத்திலிருந்து மனைவி பணிபுரியும் இடமும் அல்லது மனைவி பணிபுரியும் இடத்திலிருந்து கணவர் பணிபுரியும் இடமும் 30 கி.மீ சுற்றளவுக்கும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவர்களை தனித்தனியே வசிப்பதாக கருதி கணவன் / மனைவி (Spouse Employed) பணிபுரிபவர்கள் என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படலாம். 15. பொது:- 7 கணவன் / மனைவி என்ற முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் கோரும்ணிடமானது, கணவன் அல்லது மனைவி பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும். கணவன் மனைவி என்ற முன்னுரிமை மைய அரசு, மாநில அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் / அரசு சார்ந்த அலுவலகங்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும், அதற்கென அதிகாரமளிக்கப்பட்ட உரிய அலுவலர்களால் பணிச்சான்று வழங்கப்பட வேண்டும். இதில் மைய அரசு / மாநில அரசு / பொதுத்துறை என்ற பாகுபாடு கிடையாது. கணவர் / மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30 கி.மீ. சுற்றளவுக்கும் மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட முன்னுரிமை இல்லாத இதர ஆசிரியர்கள்.

மாறுதல் கலந்தாய்வு (Transfer Counseling) முறையில் ஆசிரியர்கள் பொதுமாறுதலின் போது கீழ்க்காணும் நிபந்தனைகளையும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் / இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) கருத்தில் கொள்ள வேண்டும். அ) மாறுதல் கோரும் ஆசிரியர்கள் / விடுதிகளில் காப்பாளர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள், உரிய படிவத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முன்னுரிமை (Priority) கோரும் ஆசிரியர்கள் அதற்கான சான்றிதழினை உரிய அலுவலரிடம் பெற்று இணைக்க வேண்டும்.

ஆ) மாறுதல் கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் உரிய முன்னுரிமை பட்டியல் தயார் செய்யப்பட்டு, கலந்தாய்வு நடைபெற வேண்டும்.

இ) எந்த முன்னுரிமையின் அடிப்படையில் மாறுதல் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரம் பணிமாறுதல் ஆணையில் இடம் பெற வேண்டும். ஈ) அரசாணையில் 8 குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை, ஆகியவை உள்ளூர் செய்திதாள்களில் அறிவிப்பாக வெளியிடப்பட வேண்டும்.

இதற்கான நடவடிக்கையினை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் மேற்கொள்ள வேண்டும். நடைபெறுவதற்கான கலந்தாய்வு அனைத்து முன்னேற்பாடுகளையும் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் மேற்கொள்ள வேண்டும்.

உ) மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர், கலந்தாய்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு கலந்தாய்வு பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.

ஊ) ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றாலும், அவ்விடத்தில் புதிய ஆசிரியர் பணியில் சேர்ந்த பின்னரே, மாறுதல் பெற்ற ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

எ) ஏ) ஐ) ஓ) மேல்நிலைப் பிரிவில் தாவரவியல், விலங்கியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும் போது தாம் பயின்ற Main Subject (Major) குறிப்பிடப்பட வேண்டும் மற்றும் எந்த பணியிடத்தில் (Post details Botony or Zoology or Biology) பணிபுரிகிறார் என்ற விவரத்தினையும் குறிப்பிடப்பட வேண்டும்.

மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகை புரியாமலோ, காலதாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.

மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கலந்தாய்வு மாறுதல் கோரி விண்ணப்பிக்கப்பட்ட ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் உரிய நாளில் வெளியிடப்படும். அதன் மீது திருத்தம் மற்றும் முறையீடு ஏதும் இருப்பின் அதனை சரிசெய்திட உரிய காலத்திற்குள் முழுமையாக ஒரே முறை விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி திருத்தங்கள் முறையீடுகள் மேற்கொள்ளப்பட்டு ஆசிரியர்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் வெளியிடப்பட்ட பிறகு திருத்தங்கள் | முறையீடுகள் முறையீடுகள் கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

16. ஒவ்வொரு கல்வியாண்டிற்கான கலந்தாய்வு பொதுமாறுதலானது மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் குறிப்பிடும் நாட்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதற்குப்பின் நடைபெறும் கலந்தாய்வு பொதுமாறுதலானது, பதவி உயர்வினால் அல்லது காரணங்களினால் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரால் நடத்தப்பட வேண்டும்.

ஏற்கக்கூடிய 17. கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் உள்ள காப்பாளர் / காப்பாளினி பணியிடங்களில், ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது மாணவியர் விடுதிகளுக்கு காப்பாளினிகள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் ஆண் காப்பாளர்களை நியமிக்கக் கூடாது. அதே போல் மாணவர் விடுதிகளில் ஆண் காப்பாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.

18. நிருவாகக் காரணங்களின் அடிப்படையில் (Administrative exigency), தகுதிவாய்ந்த அலுவலர்களால் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு மாறுதல் எந்த நேரத்திலும் ஆணை வழங்கப்படலாம். கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் மாறுதல் வழங்கப்படுவதற்கான காரணம் குறித்த விவரங்களை தெரிவித்து, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் முன் அனுமதி பெற வேண்டும்.

19, அரசாணை நிலை எண்.100, பள்ளிக்கல்வி (பட்ஜட்) துறை, நாள்.06.07.2003 இன்படி, கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் காலியாகும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டுநிரப்பப்பட்டு வருவதால், இவ்வகுப்புகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் ஒரு முறை பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் மூலமோ பிற நியமனங்கள் மூலமோ பணியேற்றவுடன், 10 அப்பணியிடங்களை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாகவே கருதப்பட வேண்டும். 1 முதல் 5 வகுப்புகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அப்பணியிடங்களில் மாறுதல் வழங்கக் கூடாது. அதே சமயம் 6 முதல் 8-ஆம் வகுப்புகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களது விருப்பத்தின் பேரில் 1 முதல் 5 வகுப்புகளில் இடைநிலை காலிப்பணியிடங்களுக்கு மாறுதல் வழங்கலாம்.

உள்ள ஆசிரியர்கள் 20.அரசு கள்ளர் பெண்கள் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமையாசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். மேற்கண்டவாறு ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையென்ற நிலையில் ஆண் ஆசிரியர்களை நியமனம் செய்யலாம். 21. இருபாலர் பயிலும் அரசு கள்ளர் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் விதிகளின்படி ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம். மேற்படி விதி காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும். 22.கலந்தாய்வு நாளன்றே மாறுதல் உத்தரவு அளிக்கப்பட வேண்டும்.

23.ஆசிரியர் பணியிட மாறுதல்கள் கலந்தாலோசனை (Counseling) முறையில் அவ்வாசிரியர் பெருமக்களின் விருப்பத்திற்கேற்றபடி மாறுதல் செய்யப்படுவதால் மாறுதல் பயணப்படி வழங்கப்படமாட்டாது. 24.இந்த உத்தரவு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் மற்றும் இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் / கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு / காப்பாளர், காப்பாளினிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

25.அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் துறைமாறுதல்கள் (Unit transfer) கோரி ஒருவழி மாறுதலில் தடையின்மைச் சான்று பெற்று விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்கள், பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும்.

26.ஒரு பள்ளியில் அதிகபட்ச பணி 11 ஒரே பள்ளியில் எட்டு ஆண்டுகள் (8 ஆண்டுகள்) பணியாற்றிய ஆசிரியர்கள் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள். இருப்பினும், இந்த கொள்கை வெளியிடப்பட்ட (அரசாணை (U) எண்.21, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள்.29.03.2022 நாளிலிருந்து புதியதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மட்டுமே, இந்த விதி வருங்காலத்தில் மட்டுமே பொருந்தும். இது போன்ற சந்தர்ப்பங்களில், இந்த ஆசிரியர்களுக்கு 8 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு உபரி ஆசிரியர்களுக்கு இணையாக முன்னுரிமை அளிக்கப்படும் (அதாவது பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் முன் அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்).

27.மேல்முறையீடு கலந்தாய்வின் போது பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும், அந்தந்த செயல்முறை முடிந்த 3 நாட்களுக்குள், தகுதிவாய்ந்த அதிகாரியின் அடுத்த உயர் அதிகாரிக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கலாம்.

இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் கள்ளர் சீரமைப்பு மேல்நிலை, உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் / கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் / காப்பாளர், காப்பாளினிகளுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதத்தில் அல்லது முதல் அல்லது இரண்டாவது பருவத்தில் (The Counseling shall be done either during month of May or at the end of the first or second term) நடத்தப்படும்.

4. இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில், 2026-2027- ஆம் கல்வியாண்டிற்கான கள்ளர் சீரமைப்பு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் / கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் / காப்பாளர், காப்பாளினிகளுக்கும் கலந்தாய்வு பொது மாறுதலை நடத்துமாறுமிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

பெறுநர்:

(ஆளுநரின் ஆணைப்படி)

வ.தட்சிணாமூர்த்தி,

அரசு செயலாளர்.

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர்,

சென்னை

G&GOT 600 GOT -600 005.

12 இணை இயக்குநர்,கள்ளர் சீரமைப்பு,

மதுரை -625 020.

நகல்:

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை-600 009. செயலாளரின் முதுநிலை தனிச்செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை-600 009. இருப்புக் கோப்பு /உபரி நகல். // ஆணைப்படி அனுப்பப்படுகிறது//

👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD G.O.(D).No.47 - Govt Kallar School Counseling PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.