அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லாமல் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
The Madras High Court has instructed the Tamil Nadu government to ensure that government employees receive treatment under the new health insurance scheme without paying any initial fees.
A specific case involved a police officer in Madurai who incurred ₹3.73 lakh in expenses for heart treatment, but only received partial coverage of ₹1.01 lakh from the insurance company.
The court ordered the insurance company to return ₹2.72 lakh to the employee, emphasizing that the primary goal of the scheme is to provide cashless treatment for designated diseases.
தமிழகத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிப் + பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் ரவி. காவல் துறையில் தலை மைக் காவலராக பணிபுரிகிறார். இவர் மதுரை தனியார் மருத்து வமனையில் இதய பாதிப்புக் காக மாநில அரசின் புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு ரூ.3.73 லட்சம் செலவானது. இதில் ரூ.1.01 லட்சத்தை மட் டுமே காப்பீட்டு நிறுவனம் வழங் கியது. இதையடுத்து சிகிச்சைக் கான செலவில் ரூ.2.72 லட் சத்தை திரும்ப வழங்க காப் பீட்டு நிறுவனத்துக்கு உத்தர விடக்கோரி ரவி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நோய்க்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோ திலும் கணிசமான தொகையை தனது சொந்தப்பணத்தில் இருந்து செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு நலத்திட் டங்களைச் சென்றடையச் செய் யும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அரசால் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ் தங்களுக்கு உறுதியளிக்கப் பட்ட சலுகைகளைப் பெறு வதற்காக நீதிமன்றங்களை நாட வேண்டிய கட்டாயத்துக் குத் தள்ளப்படுவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும்.
ஊழியர்களின் நலனுக் காகவே பிரத்யேகமாக உரு வாக்கப்பட்ட ஒரு திட்டம். அதன் நோக்கத்தை அடையத் தவறும்பட்சத்தில் அரசு மவுன மாக இருக்கக் கூடாது. இத்திட் டத்தின் அடிப்படை வாக்குறுதி கட்ட ணம் செலுத்தாமல் சிகிச்சை என்பதுதான். இருப் பினும் திட்டத்தில் உள்ள குறை பாடுகளால் ஊழியர்கள் சொந் தப் பணத்தை இழக்க வேண் டியுள்ளது. அரசு ஊழியர்கள் நலனுக் கான புதிய மருத்துவக் காப் பீட்டுத் திட்டம் செயல்படுத்தப் படும்போது, சிகிச்சை செயல் முறையின் ஒவ்வொரு கட்டத் திலும் கட்டணம் இல்லாமல் சிகிச்சை வழங்கும் நோக்கம் மற்றும் குறிக்கோள் உறுதி செய் யப்பட வேண்டும். பயனாளி கள் தங்கள் சொந்தப் பணத்தி லிருந்து செலவு செய்ய வேண் டிய கட்டாயம் ஏற்படாதவாறு அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட வேண்டும்.
எதிர்காலங்களில் மருத்து வக் காப்பீட்டுத் திட்டங்களில், தேவைக்கேற்ப தவணைத் தொகைகளை உயர்த்துவது டன், காப்பீட்டுத் தவணைத் தொகையின் ஒரு பகுதியை தானே செலுத்துவதன் மூலம் அரசு தனது பங்களிப்பை மேம் படுத்த வேண்டும் என நீதிமன் றம் எதிர்பார்க்கிறது.
இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து, மாநிலத் தின் நிதி நிலையை கருத் தில் கொண்டும் முடிவெடுக் கலாம். பேக்கேஜ் கட்டணங் களை பொதுவெளியில் வெளி யிட வேண்டும்.
இத்திட்டத்தில் அதிகபட்ச கட்டண வரம்பு, அனுமதிக்கப் பட்ட மருத்துவச் செலவுகளை கணக்கில் கொள்ளப்பட வேண் டும். மனுதாரருக்கு கூடுதல் மருத்துவச் செலவை மாநில அளவிலான குழு பரிசீலித்து 3 மாதங்களில் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ் வாறு உத்தரவில் கூறியுள்ளார்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.