This is a press release from the Tamil Nadu Public Service Commission (TNPSC) regarding the Combined Technical Services Examination (Non-Interview Posts) - 2026.It announces a new addendum to Notification No. 4/2026, dated May 20, 2026, specifically adding new vacancies for Assistant Engineer (Electrical) and Assistant Accounts Officer within the Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO).
Candidates who have already applied for this examination are advised to update their online applications if they meet the eligibility criteria for these newly added posts. This document is an official notification from the Tamil Nadu Public Service Commission (TNPSC) regarding the Combined Technical Services Examination for non-interview posts.
It specifically outlines instructions for candidates to ensure their eligibility before applying online via the commission's official website.
The notice emphasizes that applicants must carefully read the guidelines for candidates available on the website and satisfy all prescribed eligibility criteria for the examination.
It advises that admission to any stage of the recruitment process is purely provisional and subject to fulfilling all requirements, including passing the written exam and verification of certificates. TNPSC - ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு அறிவிக்கை - நாள்.11.06.2026
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீட்டு எண். 62/2026
न. 11.06.2026
செய்திக்குறிப்பு
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-2026.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவி பொறியாளர் (மின்னியியல்) மற்றும் உதவி கணக்கு அலுவலர் ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)க்கான அறிவிக்கை, எண்.4/2026, நாள் 20.05.2026-601 பிற்சேர்க்கை எண்.4A/2026, நாள்.11.062026-ல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இத்தெரிவிற்கு ஏற்கனவே, விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கான விண்ணப்பிக்கும் தகுதியினை பெற்றிருப்பின், தங்களின் இணையவழி விண்ணப்பத்தினை திருத்தம் (update) செய்துகொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. திரு.பானோத் ம்ருகேந்தர் லால்,இ.ஆ.ப, செயலாளர்
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-இல் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மட்டும் வரவேற்கப்படுகின்றன. 1. முக்கியமான அறிவுரைகள்:
1.1. தேர்வர்கள் தேர்வுக்கான தகுதியை உறுதி செய்தல்:
அனைத்துத் தேர்வர்களும் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-இல் உள்ள "விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்" மற்றும் இந்த அறிவிக்கையில் உள்ள அறிவுரைகளை கவனமாகப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் இத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவதற்கான அனைத்து தகுதி நிபந்தனைகளையும் அவர்கள் பூர்த்தி செய்ததை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவர்கள் தகுதி நிபந்தனைகளைத் திருப்திகரமாக பூர்த்தி செய்ததற்கு உட்பட்டு தேர்வின் அனைத்து நிலைகளிலும் அவர்களது அனுமதி முற்றிலும் தற்காலிகமானதாகும். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவது அல்லது தெரிவு செய்யப்பட்டோர் பட்டியலில் தற்காலிகமாக தேர்வரின் பெயர் சேர்க்கப்படுவதால் மட்டுமே. ஒரு தேர்வர் பதவி நியமனம் பெற உரிமை அளிக்கப்பட்டவராக கருதப்பட மாட்டார். தேர்வரால் அளிக்கப்பட்ட விவரங்கள் தவறு என்றாலோ தேர்வாணைய அறிவுரைகள் அல்லது விதிகள் மீறப்பட்டுள்ளன எனக் கண்டறியப்பட்டாலோ, எந்நிலையிலும், தெரிவு செய்யப்பட்ட பின்னர்கூட விண்ணப்ப நிலையை உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கும் உரிமை தேர்வாணையத்திற்கு உண்டு. எனவே. இத்தெரிவிற்கான விண்ணப்பமானது அனைத்து நிலைகளிலும், அதாவது தெரிவு செய்யப்பட்ட பின்னரும்கூட, தற்காலிகமானது ஆகும்.
TNPSC - ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-ல் அடங்கிய பதவிகளுக்கான அறிவிக்கை எண்.4/2026 நாள்.20.05.2026-ன் பிற்சேர்க்கை எண்.4A/2026, நாள்.11.06.2026-க்கான செய்தி வெளியீடு. CLICK HERE TO DOWNLOAD TNPSC - ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு அறிவிக்கை Notification PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.