முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள அலுவலருக்கு பதவி உயர்வு அளித்து பணி நியமனம் வழங்குதல் - ஆணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 29, 2026

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள அலுவலருக்கு பதவி உயர்வு அளித்து பணி நியமனம் வழங்குதல் - ஆணை வெளியீடு.



முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள அலுவலருக்கு பதவி உயர்வு அளித்து பணி நியமனம் வழங்குதல் - ஆணை வெளியீடு. Issuance of orders granting promotion and appointment to an officer included in the selection list for the post of Chief Educational Officer and equivalent posts.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் 2025-2026ஆம் ஆண்டுக்கான முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள அலுவலருக்கு பதவி உயர்வு அளித்து பணி நியமனம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

சுருக்கம்

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் 2025-2026ஆம் ஆண்டுக்கான முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள அலுவலருக்கு பதவி உயர்வு அளித்து பணி நியமனம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்.121

பள்ளிக்கல்வித் [(பக1(1)] துறை

நாள் 29.06.2026

பராபவ, ஆனி-15

திருவள்ளுவராண்டு-2057

படிக்கப்பட்டவை :

1. அரசாணை(நிலை) எண்.245, பள்ளிக் கல்வித் [பக1(1)] துறை, நாள் 04.11.2025.

2. பள்ளிக் கல்வி இயக்குநரின் இயக்குநரின் கடித ந.க.எண்.077405/அ1/ இ1/2024, நாள் 08.06.2026 மற்றும் 23.06.2026.

ஆணை

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு III-இன் கீழுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான 2025-2026ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2. தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணியில் வகுப்பு-IV இன் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு III-ஐச் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க, மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதத்தில் கருத்துரு பெறப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவின் அடிப்படையில், 2025-2026ஆம் ஆண்டிற்கான முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் முன்னுரிமையில் வ.எண்.30இல் உள்ள திரு.சி.வீரமணி, மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி), செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம் என்பாருக்கு முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வு அளித்து துணை இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை-6 (காலிப்பணியிடம்) அலுவலகத்தில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

சந்தர மோகன். B

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்

CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.121-2026 - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.