2026-2027ஆம் நிதியாண்டு - அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant) முதல் கட்டமாக 50% நிதியை மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் | மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
Financial Year 2026-2027 – Allocation of 50% of the Composite School Grant to districts for government schools (first phase) and guidelines | Proceedings of the State Project Director
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை -06
மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண். 1806/C1/CSG/SS/2026, நாள். 23.06.2026 பொருள்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2026-2027ஆம் நிதியாண்டு - அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant) முதல் கட்டமாக 50% நிதியை மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பு.
பார்வை:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதி மேலாண்மை மற்றும் கொள்முதல் கையேடு-2018.
மத்திய கல்வி அமைச்சகத்தின், திட்ட ஒப்புதல் குழு 2025-2026 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக, UDISE 2024-2025ன் படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கியுள்ளது.
முதல் கட்ட தொகையினை அனைத்து அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தொகையினை அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) வங்கி கணக்கிற்கு 03 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்
தங்கள் பள்ளியின் Single Nodal Account-ன் (SNA) User Name, password மற்றும் OTP ஆகியவற்றை தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மட்டுமே கையாளுதல் வேண்டும். தவறு ஏற்படின் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே வேண்டும்.
பொறுப்பேற்க வழங்கப்படும் தொகையினை கீழ்காணும் இனங்களுக்கு பயன்படுத்துதல் வேண்டும். பள்ளி மானிய தொகையில் முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்யப்பட வேண்டியவைகள் பின்வருமாறு:
பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மாணவர்கள் தடையின்றி பயன்படுத்தும் வகையில் புதிய மின் சாதனங்கள் கொள்முதல் மற்றும் மின் சாதனங்கள் பழுது பார்த்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கிடல் வேண்டும்
2. ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள Tablet-க்கு SIM -ற்கான ஏப்ரல் 2026 முதல் மார்ச் 2027 வரை மாதத்திற்கான தொகையினை மட்டும் (Rs.10/- per Tacher) பள்ளி மானியத்திலிருந்து மேற்கொள்ளுதல் வேண்டும்.
மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கை கழுவும் வசதி (Hand washing facility) மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கிடல் வேண்டும்.
4. பள்ளி வளாகத்தில் சோப்பு மற்றும் கிருமி நாசினி (Hand Sanitizer), துப்புரவு செய்ய பயன்படும் பொருள்கள் போன்ற அத்தியாவசிய ள் தேவையான அளவில் இருப்பில் உள்ளதை உறுதி வேண்டும்.
பொருள்க செய்தல் 5. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்திகரிப்பு பணி தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும்.
சுகாதார செயல்திட்டம் SAP - (Swachhta Action Plan) 1. பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10% முழு சுகாதார செயல்திட்ட SwachhtaActionPlan) இனங்களான பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத் தூய்மை, சுகாதாரமாக பராமரித்தல், கை கழுவும் வசதி (Hand washing facility) ஏற்படுத்துதல், தூய்மையான குடிநீர், மாணவர்களிடையே மற்றும் திறன் மேம்பாட்டிற்கு செய்வதற்கு விழிப்புணர்வு மற்றும் நடத்தை மாற்றம் இந்நிதியினை குறிப்பாக கழிப்பறையைச் சுத்தம் முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்துதல் வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD 2026-2027 - அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant) முதல் கட்டமாக 50% நிதியைப் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் | மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.