The news report discusses allegations that private schools in Tamil Nadu are being forced to pay bribes to education officials to renew their recognition.
It claims officials are demanding ₹3 lakh for primary schools, ₹5 lakh for matriculation schools, and ₹10 lakh for CBSE schools.
School administrators have reportedly requested the Education Minister to grant permanent recognition to schools that have operated for 10 years.
The article highlights concerns that lack of recognition is hindering administrative work and jeopardizing student safety and education.
ரூ. 30 லட்சம் தனியார் பள்ளி அங்கீகாரத்துக்கு அதிகாரிகள் வசூல்... 10 ஆண்டுகள் இயங்கிய பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் கல்வி அமைச்சரை சந்தித்து சங்க நிர்வாகிகள் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 10-தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயக்கத்தின் கீழ் 12 ஆயிரத்து 970 பள் ளிகள் இயங்கி வருகின் றன.
கடந்த கல்வியாண்டு (2025-26) கணக்குப்படி 63.42 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்ற னர்.
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப் பதாக தொடர்ந்து குற்றச் சாட்டு உள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் வரு லிக்கும் கட்டண விவ ரத்தை பள்ளி தகவல் பலகையில் வெளியிட அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஐகோர்ட் டில் வழக்கு தொடரப்பட் டுள்ளது. சான்றுகள் பெற... தமிழகத்தில் 2021ம் ஆண்டு முதல்தான் நிரந்தர அங்கீகாரம் என்ற முறை மாற்றப்பட்டு 3 ஆண்டு களுக்கு ஒருமுறை அங்கீ காரத்தை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது. அங்கீகாரத்துக்கு அரசு குறிப்பிட்டுள்ள வசதிகளு டன் நிலம், கட்டட ஆவ ணங்கள் சரியாக இருக்க வேண்டும். கலெக்டரால் அங்கீகரிக்கப்பட்ட இன் ஜினியரிடம் இருந்து பள்ளி கட்டடத்துக்கான உறுதிச் சான்று பெற வேண்டும். தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று, சுகா தார சான்று பெற வேண் டும்.
இதனால், ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு அதிகாரிக்கும் லஞ்சமாக பல லட்சங்கள் கொடுத் தால்தான் அங்கீகாரம் புதுப் பிக்கப்படும் என்ற நிலை எழுந்தது. எல்லா சான்றி தழ்களையும் பெற்று தனி யார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப் பிக்க 3 மாதங்கள் ஆகி விடும். மாவட்ட கல்வி அதிகாரி ஆவணங்களை சரிபார்த்து பள்ளிகளில் ஆய்வு செய்து இயக்குன ரகத்துக்கு பரிந்துரைக்க வேண்டும்.
பள்ளிகளுக்கு ஏற்ப இதற்கு பள்ளிக்கு ஏற்ப 'வசூல்' நடத்துவதில் அதி காரிகள் குறியாக இருக் கின்றனர். நர்சரி பள்ளிகள் புதுப்பிக்க ரூ. 3 லட்சம், லட்சம், சிபிஎஸ்இ பள்ளி கள் ரூ. 10 லட்சம் வரை 'கவனிப்பு' நடத்த வேண் டியிருக்கிறது. மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளிகளில் ரூ. 30 லட்சம் வரை கூட 'வசூல்' நடத் தப்படுகிறது என்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 3 பவள விழா ஆண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரமுறையை மாற்ற வேண்டும். 10 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி வரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங் கீகாரம் வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளி தனாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முற்றுப்புள்ளி
இது குறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோ கனிடம் தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் கூறியுள் எனர், அங்கீகாரத்துக்கு உரிய கட்டணம் தவிர மற்றவைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று அவர் உறுதியளித் நுள்ளதாக சங்க நிர்வாகிகள் த ைன்றனர்.
இதுதொடர்பாக தமிழ் நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற் றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்செய லாளர் நந்தகுமார் கூறியது:
பள்ளிகளின் அங்கீகா ரத்தை புதுப்பிக்க அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்ப பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெயரை சொல்லி வெளிப் படையாக அதிகாரிகள் பணம் வசூலிக்கின்றனர். பணம் கொடுக்காத பள்ளி களுக்கு வினக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகின்ற னர். இதனால், பள்ளிகள் நிர்வாகம் வேறு வழியின்றி பணத்தை கொடுக்கும் நிலை ஏற்படுகிறதுக் பரிசீலிக்கணும் இதை தடுக்க ஆவணங் களை சமர்ப்பித்து, வசதி களை மேம்படுத்தும் பள் ளிகளுக்கு குறைந்தது 10 ஆண்டுகள் நிரந்தர அங்கீ காரம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகார பணிக் காக அலைவதால் மாண வர்களின் கல்வி செயல்பாடுகள் பாதிக்கின் றன.
அங்கீகாரமின்மை யால் நிர்வாக பணிகள் முடங்கியுள்ளன. மாண வர்களின் பாதுகாப்பு, கல் வித்தரத்தை உறுதிசெய்வ தற்காக கொண்டுவரப்பட்ட விதிமுறைகளை லஞ்சம் வாங்க மட்டுமே கல்வித் துறை அதிகாரிகள் பயன் படுத்துகின்றனர்.
பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோ கனை சந்தித்து வலியுறுத் தினோம்.
பள்ளிகள் அங்கீகாரம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் எங்கள் கோரிக் கையை பரிசீலிக்க வேண் டும். . இவ்வாறு அவர் கூறினார்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.