Tamil Nadu government employees are sending 100,000 postcards to the Chief Minister demanding the restoration of the Old Pension Scheme (OPS).
The protesters oppose the existing "TAPS" pension scheme introduced by the DMK government, urging for a return to the older system.
The "CPS Abolition Movement" is organizing these protests, continuing efforts from the previous administration to reinstate the OPS.
நிறைவேற்றுங்க : தேர்தல் அறிக்கையில் சொன்ன பழைய பென்ஷன் வாக்குறுதிகள் - முதல்வருக்கு ஒரு லட்சம் தபால் அனுப்பும் அரசு ஊழியர்கள் Fulfill the Old Pension Scheme promises made in the election manifesto: Government employees to send one lakh letters to the Chief Minister.
நிறைவேற்றுங்க : தேர்தல் அறிக்கையில் சொன்ன பழைய பென்ஷன் வாக்குறுதிகள் - முதல்வருக்கு ஒரு லட்சம் தபால் அனுப்பும் அரசு ஊழியர்கள் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று, மாநில அளவில் முதல்வருக்கு தபால் அனுப்பி, பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வலியுறுத்தும் போராட்டம் நடத்தினர்.
த.வெ.க., தேர்தல் அறிக்கையில், 'தி.மு.க., அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 'டி.ஏ.பி.எஸ்.,' பென்ஷன் திட்டம் ஒழிக்கப்பட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைக்கு ஏற்ப, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்' என தெரிவித்திருந்தது.
இந்த தேர்தல் அறிக்கை, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட, தபால் ஓட்டுக்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு ஓட்டாக வெளிப்பட்டது.
கூறிய வாக்குறுதிப்படி 'டி.ஏ.பி.எஸ்.,' ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும், என முதல்வருக்கு கடிதம் மூலம் எழுதி அனுப்பி உள்ளனர்.
வரும், 15 வரை இதே போன்று தபால் அனுப்பும் போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளனர்.
ஈரோட்டில் ஒருங்கிணைப்பாளர் வெங்கிடு தலைமையில் தபால் அனுப்பினர். அதுபோல, பல்வேறு ஊர்களில் இருந்தும் தபால் அனுப்பப்பட்டது


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.