மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டம் - கணினி வழியாக விண்ணப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 20, 2026

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டம் - கணினி வழியாக விண்ணப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டம் - கணினி வழியாக விண்ணப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! National Scholarship Scheme for Students with Disabilities: Director of School Education orders online application submission!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06

ந.க.எண்.033001/எம்2/இ3/2026 நாள். 15.06.2026

பொருள்:

பள்ளிக்கல்வி - தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டம்-2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பங்களை கணினி வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தல் தொடர்பாக

பார்வை: மாற்றுத்திறனாளிகள் 1500 ஆணையரின் கடித 15.5.6.003653/1/2026 03.06.2026

மேற்காண் பொருள் சார்ந்து பார்வையில் காணும் கடிதத்தில், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து மாற்றுத்திறணளி மாணவ/மாணவியர்கள் தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், உதவித்தொகை பெற்றிட உரிய காலத்திற்குள் விண்ணப்பத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலன் கருதி மாணவர்களுக்கு Pre-matric மற்றும் Post-matric உதவித்தொகை பெற்றிட எதுவாக Registration மற்றும் Renewal சார்ந்த பணிகளை விரைவாக முடித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இவ்வுதவித்தொகை தொடர்பாக எழும் ஐயங்களை sodaspsc22@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு: பார்வையில் காணும் கடித நகல்

This document is an official circular from the Directorate of School Education, Chennai, dated June 15, 2026, regarding the National Scholarship Scheme for disabled students for the 2026-2027 academic year.

It instructs district educational officers to ensure that all eligible disabled students register or renew their applications promptly for Pre-matric and Post-matric scholarships.

Students or parents with questions regarding this scholarship are directed to email their queries to scdaspec22@gmail.com

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD DSE - Scholarship for Disabled Students PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.