ஊக்க ஊதிய உயர்வு - ஒரே நீதிமன்றம் இரு வேறு தீர்ப்புகள்: Incentive Increment – Two Different Verdicts from the Same Court:
ஒரே நீதிமன்றம் இரு வேறு தீர்ப்புகள்:
*நீதிபதி ஆர் சுரேஷ் குமார் டிவிஷன் பெஞ்ச் 10.03.2020 தேதிக்கு முன் உயர் கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் 03.12.2024 என தீர்ப்பு அளித்திருந்த நிலையில் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு அரசின் நிலைப்பாடு GO.95 சரி என்று இன்று 08.06.2026 தீர்ப்பை வழங்கியுள்ளது... * ஊக்க ஊதிய உயர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் ஆர் கலைமதி அடங்கிய DIVISION BENCH முன்பாக விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது...
* மூத்த வழக்கறிஞர்கள் திருமதி நளினி சிதம்பரம் திருமதி கவிதா ரமேஷ்வர் திருமதி C.Uma திரு சசிதரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மிகத் திறமையாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தரப்பு வாதங்களை முன்னெடுத்து வைத்தனர்
* நீதிபதி ஆர் சுரேஷ் குமார் தலைமையிலான டிவிஷன் பென்ச் சாதகமான தீர்ப்பை வழங்கி உள்ளதை சுட்டிக்காட்டி அதே போன்றதொரு தீர்ப்பை வழங்க வேண்டும் என வாதிட்டனர்...
* இருப்பினும் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு அனைத்து கருத்துகளையும் புறந்தள்ளி அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது அதாவது அரசு நிலைப்பாடு சரி.. அனைவருக்கும் அரசாணை 95 படி லம்சமும் அமௌன்ட் மட்டுமே வழங்க முடியும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்....
CLICK HERE TO DOWNLOAD Judgement Copy - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.