சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு - CBSE Class 10th Phase 2 Public Examination Schedule Released - To be Held from May 15 to 21
மே 15 முதல் 21 வரை நடைபெறும்
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் மே 15 முதல் 21 வரை நடைபெறும். முதல் கட்ட தேர்வில் தோல்வியடைந்த அல்லது மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம்.
மாணவர்கள் அதிகபட்சம் 3 பாடங்கள் வரை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
புது தில்லி, ஏப். 23: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வியாழக்கி ழமை வெளியிடப்பட்டது.
அதன்படி, பொதுத் தேர்வு தேர்வு வரும் மே 15- ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி நிறைவ டைய உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்களின் நலன் கருதி, நிகழாண்டுமுதல் ஆண் டுக்கு இரு முறை சிபிஎஸ்இ நடத் துகிறது. முதல் கட்ட பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரியில் நடத் தப்பட்டு, அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முதல் கட்ட பொதுத் தேர் வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்பது கட்டாயமாகும்.
இதில் தோல்வியடைந்த மாணவர்கள் அல்லது மதிப் பெண்ணை அதிகரிக்க விரும்பும் மாணவர்கள் பயன்பெறும் வகை யில், வரும் மே 15-ஆம் தேதி முதல்இரண்டாம்கட்டபொதுத் தேர்வைசிபிஎஸ்இநடத்துகிறது. இந்த இரண்டாம் கட்ட பொதுத் தேர்வில் அதிகபட்சம் 3 பாடங் கள் வரை மாணவர்கள் தேர்வெ ழுதி மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ள முடியும்.
கால அட்டவணை: மே 15- கணிதம் (அடிப்படை மற்றும் மேம்பட்ட தரப் பாடம்), மே 16- ஆங்கிலம் (தொடர்புதிறன், மொழி, மொழியியல்),
மே 18- அறிவியல், மே 19- வி ருப்ப மொழிப் படாம் (தமிழ், உருது, தெலுங்கு, ஹிந்தி, பஞ் சாபி, பெங்காலி, மராத்தி, குஜராத்தி மற்றும் பல வெளி நாட்டு மொழிகள்), மே 20-சம்ஸ்கிருதம், ஓவியம், தகவல் தொழில்நுட்பம், மே 21-சமூக அறிவியல்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.