ஆதரவற்ற விதவைகளின் மாதாந்திர வருமான உச்சவரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு! Government decree issued raising the monthly income ceiling for destitute widows!
ஆதரவற்ற விதவைகளின் மாதாந்திர வருமான உச்சவரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு!
2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் ஆதரவற்ற விதவைகள்-மாதாந்திர வருமான உச்சவரம்பை உயர்த்துதல் - ஆணைகள்-வெளியிடப்படுகின்றன.
மனித வள மேலாண்மை (எஸ்) துறை அரசு ஆணை (நிலை) எண்.15
நாள்: 24.02.2026.
விசுவாவசு, மாசி-12
திருவள்ளுவர் ஆண்டு-2057. படிக்கப்பட்டது :
1. அரசாணை (நிலை) எண்.395, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (பணி.எஸ்) துறை, நாள்.04.11.1993.
ஆணை:
அரசாணை (நிலை) எண்.89, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (எஸ்) துறை, நாள்.05.07.2006.
மேலே, முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், அனைத்து மாதாந்திர வருமானமும் கணக்கில் எடுத்துக் கொண்ட பின்பும், ரூ.1000/-ற்கு (ரூபாய் ஆயிரம் மட்டும்) மிகாமல் வருமானம் உள்ள விதவையினை, "ஆதரவற்ற விதவை" என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், மேற்குறிப்பிட்ட வருமான உச்சவரம்பை ரூ.1000/-லிருந்து ரூ.4000/- (ரூபாய் நான்காயிரம் மட்டும்) ஆக உயர்த்தி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 3. அதன்படி, 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தின் பிரிவு 20(8)(ii)-க்கான விளக்கம்-I(i)ல், அனைத்து மாதாந்திர வருமானமும் கணக்கில் எடுத்துக் கொண்ட பின்பு, ரூ.4000/-ற்கு (ரூபாய் நான்காயிரம் மட்டும்) மிகாமல் வருமானம் உள்ள விதவையினை, "ஆதரவற்ற விதவை" என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த வருமானத்தில், குடும்ப ஓய்வூதியம், தொழில் நிபுணர்களின் தனிப்பட்ட வருமானம் மற்றும் பிற வருமானங்களும் அடங்கும். ஆனால், விவாகரத்து பெற்றவர்கள் ஆதரவற்ற விதவையாக கருதப்படமாட்டார்கள்.
4. மேற்படி சட்டத்தின் பிரிவு 26(2)-க்கான வரம்புரையின்படி, ஊதிய நிலையில், நிலை 10-க்கு மேற்படாத சம்பளத்துடன் கூடிய பணியிடங்களுக்கான நேரடிப் பணிநியமனங்களில், மகளிருக்கென ஒதுக்கப்பட்டுள்ள முப்பது சதவிகித காலிப்பணியிடங்களின் பத்து சதவிகித காலிப்பணியிடங்கள், ஆதரவற்ற விதவைகளுக்கென ஒதுக்கப்பட வேண்டும். மேலும், மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 20 (8)-இன்கீழ் வயது வரம்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
5. 2006-ஆம் ஆண்டு முதல் வாழ்க்கைச் செலவில், ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, மேற்கூறிய மாதாந்திர வருமான உச்சவரம்பை ரூ.4,000/-லிருந்து (ரூபாய் நான்காயிரம் மட்டும்) ரூ.8,000/-ஆக (ரூபாய் எட்டாயிரம் மட்டும்) உயர்த்தலாம் என அரசு முடிவுசெய்து, அவ்வாறே ஆணையிடுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி.சமயமூர்த்தி
அரசு முதன்மைச் செயலாளர். தமிழகத்தில் ஆதரவற்ற விதவைகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில், தகுதியைப் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதன் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
வருமான உச்சவரம்பு உயர்வு
பழைய உச்சவரம்பு: இதற்கு முன்பு இந்த ஓய்வூதியம் பெற தகுதியானவர்களின் ஆண்டு வருமானம் ₹24,000-க்குள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.
புதிய உச்சவரம்பு: தற்போது இந்த ஆண்டு வருமான உச்சவரம்பு ₹1,20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திட்டத்தின் பின்னணி மற்றும் நோக்கம்
பொருளாதார மாற்றம்: விலைவாசி உயர்வு மற்றும் தற்போதைய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, அதிகப்படியான ஆதரவற்ற விதவைகள் பயன்பெறும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் இதற்கான முறையான அரசாணை (G.O) வெளியிடப்பட்டுள்ளது.
பயனாளிகள்: இதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட, இதுவரை வருமான உச்சவரம்பு காரணமாக விண்ணப்பிக்க முடியாமல் இருந்த பல பெண்கள் இனி மாதாந்திர ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
ஓய்வூதியத் தொகை
தகுதியுள்ள பயனாளிகளுக்கு தற்போது மாதம் ₹1,200 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது (இது முன்னர் ₹1,000 ஆக இருந்தது)
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும்
CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.15 - Destitute Widow Income - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.