கல்வித்துறையைச் சார்ந்து நடைபெற்று வரும் வழக்குகள் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு சிறு விளக்கம் A brief explanation of teachers' doubts regarding ongoing cases and general transition consultation with the Education Department
*ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு* *சிறு விளக்கம்*
நீதிமன்றத்தில் கல்வித்துறையைச் சார்ந்து நடைபெற்று வரும் வழக்குகள் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக ஆசிரியர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவற்றை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்தச் சிறிய பதிவு.
இந்த கல்வியாண்டில் இதுவரை *இரண்டு முறை நீதிமன்றம்* *இடைக்காலத் தடை* வழங்கியுள்ளது.
1. பணி நிரவல் கலந்தாய்வு (தொடக்கக் கல்வித்துறை):
தொடக்கக் கல்வித்துறையில் நடைபெறவிருந்த பணி நிரவல் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலிருந்தும், "இயக்குநரின் மறு உத்தரவு வரும் வரை பணி நிரவல் கலந்தாய்வு ஆணைகளை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாது" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முழுமையான நீதிமன்ற உத்தரவு இன்னும் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே, விரிவான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும், இடைக்காலத் தடை வழங்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும்.
2. பொது மாறுதல் கலந்தாய்வு:
இரண்டாவது முறையாக, பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஆகிய இரு துறைகளிலும் நடைபெறவிருந்த பொது மாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை இன்று மாலை 4 மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இரு துறைகளிலும் வெளியிடப்பட்டிருந்த இணை செயல்முறைகளுக்கு ( Stay for Joint proceedings ) தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தாமல் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்துவது ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இந்த வழக்கின் மையக் கருத்தாகும். இந்த வழக்கின் உத்தரவு இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்கள் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னரே அனைவருக்கும் தெளிவாகத் தெரியவரும்.
எனவே, ஆசிரியர்கள் தற்போது தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய இரண்டு தகவல்கள்: - தொடக்கக் கல்வித்துறையின் *பணி நிரவல் கலந்தாய்வுக்கு* *இடைக்காலத் தடை* *வழங்கப்பட்டுள்ளது.*
- *பள்ளிக்கல்வித்துறை மற்றும்* *தொடக்கக் கல்வித்துறை ஆகிய* *இரண்டிலும் பொது மாறுதல்* *கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை* *வழங்கப்பட்டுள்ளது.*
பதவி உயர்வுக்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ளதாக பரவி வரும் தகவல்களுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்பாடும் இல்லை.
நீதிமன்ற உத்தரவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகே அதன் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
மேலும், பதவி உயர்வு தொடர்பான செயல்முறைகளே இன்னும் வெளியிடப்படாத நிலையில், அதற்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ளது என்று கூறுவதை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியாது *என்பதையும் அனைவரும் புரிந்து* *கொள்ள வேண்டும்.*
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு." —
திருவள்ளுவர்
ஆதாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்பி, தேவையற்ற வதந்திகளைத் தவிர்ப்போம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.