எங்களை ஆதரியுங்கள்!
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமக்கு பக்கபலமாக நின்று, அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பிப்ரவரி 8, 2026-ல் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ நன்றி தெரிவிக்கும் மாநாட்டில், திமுக ஆட்சி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்கும் என்றும், கலைஞர் காலத்தைப் போல இந்த ஆட்சியிலும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
முக்கிய அம்சங்கள்:
ஆதரவு கோரிக்கை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுக அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என வேண்டுகோள்.
நலத்திட்டங்கள்: ஓய்வூதியத் திட்டம், கல்வி முன்பணம் உயர்வு மற்றும் பல்வேறு சலுகைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நன்றி மாநாடு: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றியமைக்காக ஜாக்டோ-ஜியோ சங்கம் நன்றி தெரிவித்தது.
தங்களின் நியாயமான கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்ற அரசு உறுதியுடன் உள்ளதாகவும், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த ஜாக்டோ-ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிய தலைமை ஒருங்கிணைப்பாளர்கள். அருகில், அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன்.
அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், மக் களிடம் பாராட்டு பெற காரணமே அரசு ஊழி யர்கள்தான். அடுத்து அமைய இருக்கும் திமுக 2.0 ஆட்சியிலும் உங்கள் கோரிக்கைகள் நிறைவே றும். எங்களுக்கு நீங்கள் பக்கபலமாக இருந்தால் நாங்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப் போம் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பு சென் னையில் நேற்று நடத்திய நன்றி அறிவிப்பு மாநாட் டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அரசு ஊழியர்கள், ஆசி ரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் (டாப்ஸ்) திட்டத்தை நிறைவேற் றிய முதல்வர் ஸ்டாலி னுக்கு நன்றி தெரிவிக் கும் மாநாடு, ஜாக்டோ-ஜியோ அமைப்புசார்பில் சென்னை நந்தனம் ஓய் எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியது:
மக்கள் பிரதிநிதிக ளாக நாங்களும், அரசு ஊழியர்களாக மக்களுக் காக பணியாற்றக்கூடிய நீங்களும் சேர்ந்ததுதான் அரசு. ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக நாம் இருக்கிறோம். கருணா நிதி ஆட்சி, அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களின் நலன்காக்கும் பொற்கா லமாக இருந்தது.
LIGI அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கி றோம். அரசு அலுவ லர்களை பற்றி ரகசிய குறிப்பேடு நீக்கம், ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் ரத்து, ஈட்டிய விடுப்பை பண மாக மாற்றம், வீடுகட்ட கடன், மருத்துவ காப்பீடு திட்டம், 6 மாதத்துக்கு ஒரு முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணை யான பஞ்சப்படி உயர்வு, பொங்கல் கருணை தொகை போனசாக மாற் றம், ஒளிவுமறைவற்ற பணிமாறுதல், 10 ஆயி ரம் சாலைப்பணியாளர் நியமனம், 7 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர் கள் நியமனம், 2 லட் சம் பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் என தொடர்ந்து நன்மையை மட்டுமே செய்ததுதிமுக ஆட்சிதான்.
பாதுகாப்பது நாங்கதான் நாங்கள், மக்கள் நல
னுக்கு உருவாக்கும் திட் டங்களை மக்களிடம் ஊழியர்கள்தான். ஆசிரி கொண்டு சேர்ப்பது அரசு யர்கள் செய்வது பணி அல்ல. அது தொண்டு. உங்களால்தான் இந் தியாவில் பள்ளிக்கல் வியில் 2வது சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. நீங்கள் உருவாக்கியவர்கள்தான் உலகம் முழுவதும் தமிழ கத்துக்கும், இந்தியாவுக்
கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் எதிர்கா லமான மாணவர்களை உருவாக்கக்கூடிய ஆசி ரியர்கள் மற்றும் பேராசி ரியர்களை பாதுகாக்கும் அரசுதான் திமுக அரசு.
நன்றி சொல்ல வந்தேன் மகளிர் உரிமை திட்
டம், மகளிர் விடியல் பயணம், கனவு இல்லம், தோழி விடுதி என செயல் படுத்தும் எல்லாதிட்டங் களாலும் அரசுக்குநற்பெ யர் கிடைத்த பெருமை யில் பெரும் பங்கு அரசு ஊழியர்களுக்குதான் இருக்கிறது. அதற்கு நன்றி தெரிவிக்கவே இந்த மாநாடுக்கு வந்தி ருக்கிறேன். கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு மத்திய அரசுக்கு இணை யாக தொடர்ந்து வழங் சுப்பட்டு வருகிறது. உங்கள் கோரிக்கையை ஏற்று அக்டோபர் முதல் ஈட்டிய விடுப்பு பண மாகமாற்றம் செய்ய உத் தரவிடப்பட்டிருக்கிறது.
பணிக்கொடை உயர்வு
நாட்டில் வேறு எங் கும் இல்லாத புதிய திட்
டமாக, அரசு பணியா ளர்கள் விபத்தில் இறந் தால் ஒரு கோடி ரூபாய், இயற்கை மரணமடைந் தால்ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு தொகை வழங்கி வருகிறோம். மற்ற மாநி லங்களை விட தமிழ கத்தில் அரசு ஊழியர்க ளுக்கு வீடு கட்ட முன் பணம் ரூ.50 லட்சம் வழங்குகிறோம். பென் ஷன்பணிக்கொடையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி இருக்கிறோம்.
செயற்கை நிதி நெருக்கடி
பழைய பென்ஷன் திட்டத்துக்கு இணை யாக உறுதியளிக்கப் பட்ட பென்ஷன் திட் படுத்தி இருக்கிறோம். டத்தை (டாப்ஸ்) செயல் இவ்வளவு பெரிய திட் டத்தை எப்படிப்பட்ட சூழலில் நிறைவேற்றி இருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும். ஒவ்வொரு ஆண்டும் வரி பகிர்வை மத்திய அரசு குறைத்து கொண்டே இருக்கிறது. மத்திய அரசு திட்டங்களுக்குகூ முறையாக நிதி வழங்கு வது இல்லை.
Monday, February 9, 2026
New
எங்களை ஆதரியுங்கள்! - ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.