TET Results - அரசாணை : 23 (28.01.2026) பின்பற்றி வெளியிடப்படும் என TRB அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 29, 2026

TET Results - அரசாணை : 23 (28.01.2026) பின்பற்றி வெளியிடப்படும் என TRB அறிவிப்பு!



TET Results - அரசாணை : 23 (28.01.2026) பின்பற்றி வெளியிடப்படும் என TRB அறிவிப்பு!

TET தேர்வு முடிவுகள், நேற்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை (G.O.Ms.No.23, School Education (TRB) Department, Dated: 28.01.2026) பின்பற்றி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!!

ஆசிரியர் தேர்வு வாரியம்

அறிவிக்கை எண்: 03A/2025

फ्रान: 29.01.2026

ADDENDUM

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை

στ.03/2025

நாள்:11.08.2025-இன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள்-I 15.11.2025 அன்றும், தாள்-II 16.11.2025 அன்றும் நடைபெற்றன.

28.01.2026 அன்று வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித்(TRB)துறை, அரசாணை (நிலை) எண்.23-இல், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025-இன்படி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விற்கும் பின்பற்றுமாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 11.08.2025 நாளிட்ட அறிவிக்கை எண்.03/2025-இன்படி நடத்தப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I மற்றும் தாள்-II தேர்வுகளுக்கு அறிவிக்கையின் வரிசை எண்.5-இல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி பின்பற்றப்படும் என அறிவிக்கப்படுகிறது.



CLICK HERE TO DOWNLOAD TRB அறிவிப்பு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.