JEE. மெயின் 2026: சி.எஸ்.இ.யில் சேர கட்-ஆஃப் ரேங்க் விவரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 29, 2026

JEE. மெயின் 2026: சி.எஸ்.இ.யில் சேர கட்-ஆஃப் ரேங்க் விவரம்



JEE. மெயின் 2026: சி.எஸ்.இ.யில் சேர கட்-ஆஃப் ரேங்க் விவரம் - JEE Main 2026: Cut-off rank details for admission to CSE.

ஜே.இ.இ. மெயின் 2026: சி.எஸ்.இ.யில் சேர கட்-ஆஃப் ரேங்க் விவரம்

போட்டியின் தீவிரம்:

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 முதல் 13 லட்சம் மாணவர்கள் ஜே.இ.இ. மெயின் தேர்வை எழுதுகின்றனர்.

இதில் 2.5 லட்சம் பேர் தகுதி பெற்றாலும், சுமார் 40,000 பேருக்கு மட்டுமே ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் இடம் கிடைக்கிறது.

சி.எஸ்.இ.க்கு மவுசு:

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (CSE) துறை இந்தியாவில் பொறியியல் மாணவர்களின் முதல் தேர்வாக உள்ளது.

உலகளாவிய மென்பொருள் தேவை, செயற்கை நுண்ணறிவு (AI), மற்றும் தரவு அறிவியல் (Data Science) ஆகியவற்றின் வளர்ச்சியே இதற்குக் காரணம்.

ஐஐடி-களில் சி.எஸ்.இ. இடங்கள்:

இந்தியாவில் உள்ள 25-க்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி.களில் மொத்தம் 16,000 - 17,000 இடங்கள் உள்ளன.

இதில் சி.எஸ்.இ.க்கு என 3,000 முதல் 3,500 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

டாப் ஐஐடிகள் (மும்பை, டெல்லி): ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் 100 முதல் 300 இடங்களுக்குள் தரவரிசை தேவை.

அடுத்தடுத்த ஐஐடிகள் (சென்னை, கான்பூர், காரக்பூர்): 300 முதல் 800 வரையிலான தரவரிசை தேவை.

புதிய ஐஐடிகள் (ரூர்க்கி, குவஹாத்தி): 1,500 வரையிலும், மற்ற புதிய ஐஐடி-களில் 2,000 முதல் 5,000 தரவரிசை வரையிலும் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. என்.ஐ.டி-களில் சி.எஸ்.இ. இடங்கள்:

31 என்.ஐ.டி.களில் மொத்தம் உள்ள 23,000 இடங்களில், சுமார் 9,000 - 10,000 இடங்கள் கணினி சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னணி என்.ஐ.டிகள் (திருச்சி, சூரத்கல், வாரங்கல்): ஜே.இ.இ. மெயின் தேர்வில் 1,000 முதல் 3,000 தரவரிசைக்குள் இருக்க வேண்டும்.

பிற என்.ஐ.டிகள் (அலகாபாத், ரூர்கேலா): 4,000 - 8,000 தரவரிசை வரை இடங்கள் கிடைக்கின்றன.

புதிய என்.ஐ.டிகள் (மாநில ஒதுக்கீடு): 25,000 தரவரிசை வரை கூட இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஐஐஐடி-களில் சி.எஸ்.இ. இடங்கள்:

ஐஐஐடி நிறுவனங்களில் சுமார் 6,000 - 7,000 இடங்கள் உள்ளன.

முன்னணி ஐஐஐடி (ஹைதராபாத்): 1,000 - 2,000 தரவரிசை தேவை.

புதிய ஐஐஐடி-கள்: 15,000 முதல் 30,000 தரவரிசை வரையிலும் இடங்கள் நிரப்பப்படுகின்றன.

குறிப்பு: இட ஒதுக்கீடு மற்றும் பாலின ஒதுக்கீடு காரணமாக இந்த தரவரிசையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

வெற்றியின் ரகசியம் (முனைவர் சௌரப் குமார் கருத்து):

சிறந்த தரவரிசை நல்ல கல்லூரிக்கு கதவைத் திறந்து விடலாம். ஆனால், எதிர்காலத்தை தீர்மானிப்பது தரவரிசை அல்ல.

தொழில்நுட்பத் துறையில் வெற்றி பெற தேவைப்படுபவை:

பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் (Problem-solving ability).

புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ளும் தகவமைப்பு (Adaptability).

தொடர்ச்சியான கோடிங் பயிற்சி (Coding) மற்றும் தரமான திட்டப்பணிகள் (Projects).

தொடர்ச்சியான உழைப்பு, தேடல் மற்றும் கற்றல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.