தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - நடைமுறைகள் - தேர்தல் ஆணையம் - TN Elections 2026 - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 16, 2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - நடைமுறைகள் - தேர்தல் ஆணையம் - TN Elections 2026 - PDF



தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - நடைமுறைகள் - தேர்தல் ஆணையம் - TN Elections 2026 - PDF

TN Elections 2026 - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி வெளியீடு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - நடைமுறைகள் - தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் - 2026

இந்திய தேர்தல் ஆணையம் 15.03.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலின் அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி வாக்குப்பதிவு அட்டவணை பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளான 15.03.2026 முதல் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செயல்முறைகள் முடியும் வரை இவ்விதிமுறைகள் அமலில் இருக்கும். இவ்விதிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகள், போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசுத் துறைகள் அனைத்திற்கும் பொருந்தும்.

எல்லா அரசியல் கட்சிகளும் மற்றும் வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, சுதந்திரமான, நியாயமான, அமைதியான மற்றும் அனைவரது பங்கேற்பும் கொண்ட தேர்தலை நடத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்து துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள். வாரியங்கள் மற்றும் கழகங்களின் தலைவர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 13CC படி தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பணியாளர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் எந்த விதப் பாரபட்சமுமின்றி தங்கள் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 01.01.2026 தகுதித் தேதியை அடிப்படையாகக் கொண்டு இறுதி வாக்கலார் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது. 15.03.2026 நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் மொத்தம் : 5.6917979 (ஆண் வாக்காளர்கள் 2.78,32032, பெண் வாக்காளர்கள் 2,9078,291. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7.656). மேலும் 67.168 சேவை வாக்காளர்கள் (Service Electors) Sறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தற்போது தொடர்ச்சியான திருத்தம் நடைபெற்று வருகிறது. புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6 மற்றும் முகவரி மாற்றத்திற்காக படிவம் B-ஐ வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளுக்கு முந்தைய 10 நாட்கள் வரை சமர்ப்பிக்கலாம்.

அனைத்து வாக்காளர்களும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்து தங்கள் பகுதி எண் (Part No) மற்றும் வரிசை எண் (Serial No) ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு தங்களது வாக்குச்சாவடி இருப்பிடத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாக்காளர் பட்டியலில் பெயரை அறிய இணையதள வாக்காளர் தேடல் வசதி மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலக உதவி மையம் மூலம் உதவி பெறவாம்.

இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து தகுதி பெற்ற வாக்காளர்களும் வசதிகளை வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறுவதற்காக பல்வேறு கூடுதல் அறிமுகப்படுத்தியுள்ளது. 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள். 40% di குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் வீட்டிலிருந்தே கோவிட் சிகிச்சை பெறும் வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களித்து தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் விண்ணப்பம் பெற்றபின் அவர்களது தகுதியை சரிபார்த்து. தபால் வாக்குச் சீட்டை விட்டிலேயே வழங்கி நிரப்பிய பின் திரும்பப் பெறுவார். தபால் வாக்கு வசதியினை பெறுவதற்கு மடிவம் 12D ஐ பூர்த்தி செய்து தேர்தல் அலுவலரிடம் 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கீழ்கண்ட குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. போதுமான எண்ணிக்கையில் நாற்காலிகள், உதவி மையம். வாக்குச்சாவடிகளில் போதுமான வெளிச்சம். மின்வசதி. கழிப்பறை வசதி. வழிகாட்டி பலகைகள் குடிநீர் வசதி அணுகு சாலை வசதி உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சக்கர நாற்காலிகள் வசதி, தன்னார்வலர்கள். தேவையான மேசைகள் போன்றவை வழங்கப்படும்.

CLICK HERE TO DOWNLOAD தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - நடைமுறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.