TAPS Tamil Nadu Assured Pension Scheme திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் - முதலமைச்சரின் வேண்டுகோள்: - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 3, 2026

TAPS Tamil Nadu Assured Pension Scheme திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் - முதலமைச்சரின் வேண்டுகோள்:



TAPS திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் - முதலமைச்சரின் வேண்டுகோள்:

தமிழ்நாடு அரசு தற்போது சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய பெரும் செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடுகிறது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும், அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் இந்த TAPS திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம்!

கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியம்!

ஓய்வூதியம் பெறுவோருக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு இணையாக அகவிலைப்படி அறிவிக்கப்படும்!

உறுதியளிக்கப்பட்ட 50% ஓய்வூதியத்தில் வழங்குவதற்கு பயனாளிகளின் 10% பங்களிப்போடு ஓய்வூதிய நிதியம்!

ஓய்வூதிய நிதியத்துக்கு தேவைப்படும் கூடுதல் நிதி (ரூ.13,000 கோடி) முழுவதும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்

புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்துவதற்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஊதியம் வழங்கப்படும்!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.