NMMS ஜனவரி 2026 - தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு - அறிவுரைகள் தொடர்பாக - DGE PROCEEDING
அனுப்புநர்
முனைவர் தராஜேந்திரன்,
இணை இயக்குநர்(மேல்நிலை)
அரசுத் தேர்வுகள் இயக்ககம்.
சென்னை-6
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்கள்
அனைத்து மாவட்டங்கள்
ந.க.எண்.013364/4(3)/2025
. 08.01.2026
ஐயா/அம்மையீர்,
பொருள்
சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஜனவரி 2026 தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு அறிவுரைகள் தொடர்பாக.
1. NMMS தேர்விற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதிவெண் ஒன்பது இலக்கங்களைக் கொண்டிருக்கும். ஆனால் Absentee list OMR -ல் பதிவெண் பதிய 8 கட்டங்கள் மட்டுமே உள்ளதால், பதிவெண்ணின் முதல் இலக்க எண்ணை தவிர்த்து அதாவது 2 என்ற முதல் எண்ணை தவிர்த்து மீதமுள்ள 8 இலக்க எண்ணை பதிவிடவும்.
2. மாற்றம் கோரும் பள்ளிக்கு, பழைய தேர்வு மையத்திலிருந்து உரிய பாதுகாப்பு முறையில் OMR தாட்களை மாற்றம் செய்ய வேண்டும்.
3. தேர்வு மையம் மாற்றம் கோரிய பள்ளிகளின் தலைமையாசிரியர் புதிய தேர்வு மைய கண்காணிப்பாளருக்கு தங்கள் பள்ளியின் மாணவ/மாணவியின் பெயரை புதிய தேர்வு மையத்தின் பெயர்பட்டியலின் இறுதியில் பெயர் மற்றும் இதர விவரங்களை பதிவிட செய்ய கோரி (addition) கடிதம் அனுப்ப வேண்டும். பழைய தேர்வு மைய தலைமை ஆசிரிய தங்களின் பெயர்பட்டியலில் எத்தனை தேர்வர்கள் பிற பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனரோ அவர்களின் பெயரை transferred to .....பள்ளி என பதிவிட வேண்டும்.
4. தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்ட தேர்வர்களின் Hall Ticket ல் பள்ளி தலைமை ஆசிரியர் உரிய திருத்தத்தினை மேற்கொண்டு மேலொப்பமிட வேண்டும்.
5. சில தேர்வர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யும்போது தவறு செய்திருப்பின் நுழைவு சீட்டில் புகைப்படம் மட்டும் சரியாக இருந்து பிற விவரங்கள் மாறுபடும் நிகழ்வில் NR ல் உரிய திருத்தத்தினை மேற்கொண்டு, முதன்மை கண்காணிப்பாளர் மேலொப்பம் இட வேண்டும்.
ஒம்/-
இணை இயக்குநர்(மேல்நிலை)
CLICK HERE TO DOWNLOAD அறிவுரைகள் DGE PROCEEDING - 08.01.2026 PDF
Friday, January 9, 2026
New
NMMS INSTRUCTION OMR ஜனவரி 2026 - தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு - அறிவுரைகள் தொடர்பாக - DGE PROCEEDING - 08.01.2026
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.