Grants IInd INstallment Instructions - அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant)-இரண்டாம் கட்டமாக 50% நிதியை வட்டார வளமையங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 13, 2026

Grants IInd INstallment Instructions - அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant)-இரண்டாம் கட்டமாக 50% நிதியை வட்டார வளமையங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Composite School Grant for Government Schools - Distribution of 50% of the funds to Regional Resource Centers in the second phase and publication of guidelines - அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant)-இரண்டாம் கட்டமாக 50% நிதியை வட்டார வளமையங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 20252026 ஆம் நிதியாண்டு அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant)-இரண்டாம் கட்டமாக 50% நிதியை வட்டார வளமையங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு

Grants IInd INstallment Instructions - Download here பார்வையில் காணும் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி, 2025-26ஆம் கல்வியாண்டிற்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு ஒப்புதலின்படி UDISE 2023-24-ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை செய்து பெறப்பட்டுள்ளது எனவும், அதன்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு Elementary:F.01.18, Secondary: F.03.12 என்ற தலைப்பின் கீழ் SNA மூலம் முதல் தவனை தொகையை நிதி வரம்பு நிர்ணயம் (Limit Fixation) செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1374 அரசு தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2023-24ஆம் ஆண்டின் UDISE விபரப்படி மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப இரண்டாம் தவனையான 50 சதவீத தொகை ரூ.2,03,32,500/- (ரூபாய் இரண்டு கோடியே மூன்று இலட்சத்து முப்பத்திரண்டாயிரத்து ஐநூறு மட்டும்) இணைப்பில் கண்டுள்ளவாறு அனைத்து வட்டார வள மையங்களின் SNA வங்கி கணக்கிற்கு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு Elementary:F.01.18 (மற்றும்) உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு Secondary:F.03.12 என்ற தலைப்பின் கீழ் SNA மூலம் நிதி வரம்பு நிர்ணயம் (Limit Fixation) செய்து பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.