இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சர் உறுதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 13, 2026

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சர் உறுதி

*FLASH NEWS* இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சர் உறுதி

பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது...

அமைச்சர் இல்லத்தில் இருந்து இதுவரை வெளிவரவில்லை...

இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி 21 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர் இடைநிலை ஆசிரியர்கள்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகைக்குள் ஆசிரியர்கள் பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஆசிரியர்கள் கருத்து.


போராட்டத்தில் ஆசிரியர்கள் - நேரடி பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அழைப்பு

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறந்த நிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டபாடில்லை.

இப்படிப்பட்ட சூழலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி போராடும் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று (ஜனவரி 14, 2026) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இது தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் முக்கிய நடவடிக்கையாகும். ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடி வருகின்றனர், அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடந்தும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமைச்சர் நேரடியாக தலையிட்டு இந்த அழைப்பை விடுத்துள்ளார், இது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

அமைச்சர் பேச்சுவார்த்தை:

சம வேலைக்கு சம ஊதியம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.