ரகசிய அழைப்பு! அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் இன்று பேச்சு
ரகசிய அழைப்பு! அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் இன்று பேச்சு - ஜனவரி 6 போராட்டத்தை முறியடிக்க அரசு இறுதி முயற்சி
Secret call - Talks with government employees and teachers' union executives today - Government's final attempt to quell the January 6 protest
ரகசிய அழைப்பு!
அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் இன்று பேச்சு
ஜனவரி 6 போராட்டத்தை முறியடிக்க அரசு இறுதி முயற்சி
ஜனவரி 6ம் தேதி முதல் அரசு ஊழியர் கள் தொடங்க இருக்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை முறியடிக்க, அரசு இறுதிகட்ட முயற் சிகளில் இறங்கியுள்ளது. வெளிப்படையாக பேச் சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காமல், தனிப்பட்ட முறையில் பேச திட்டமிட் டுள்ள அரசு, ஜாக்டோ -ஜியோ, போட்டா-ஜியோ மாநில ஒருங்கிணைப்பா ளர்களுடன் இன்று தனித் தனியே பேச்சுவார்த்தை நடத்துகிறது.
பழைய பென்ஷன் திட் டத்தை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி ரியர்கள், கடந்த 22 ஆண் டுகளாக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடை யில், திமுக ஆட்சிக்கு வந் தால் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்ப டும் என்று கடந்த சட்ட சபை தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித் தது. ஆனால், திமுக ஆட் 'சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து, அடுத்த தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் இதுவரை தேர் தல் வாக்குறுதியை நிறை வேற்றவில்லை.
பேச்சு தோல்வி
இதற்கிடையில், புதிய பென்ஷன், பழைய பென்
ஷன், ஒருங்கிணைந்த பென்ஷன் ஆகியவற்றில் எது சிறந்தது என்பதை ஆய்வு செய்து பரிந்து ரைக்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்தார். இதற்கிடை யில் வரும் 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட் டத்துக்கு ஜாக்டோ - ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்பு கள் அழைப்பு விடுத்தன. இதையடுத்து எல்லா அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங் களுடன் அரசுத் தரப்பு கடந்த 22ம் தேதி பேச் சுவார்த்தையில் ஈடுபட் டது. அது தோல்வியில் முடிந்தது. அதேநேரம் குறிப்பிட்ட சங்க சங்க நிர்வாகி களுக்கு, அவர்களின் கருத் துக்களை கூற அனுமதி மறுக்கப்பட்டதாக பேச் சுவார்த்தையின் போதே சர்ச்சை வெடித்தது.
அரசு ஆலோசனை
இந்த சூழ்நிலையில், ககன்தீப் சிங் பேடி தலை மையிலான பென்ஷன் குழு, கடந்த 30ம் தேதி தனது பரிந்துரையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியது. அந்த பரிந் துரையில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து, அமைச்சர்கள் எ.வ.வே லு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்
யாமொழி ஆகியோர், தலைமைச் செயலகத் தில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக ஜாக்டோ - ஜியோ மற் றும் போட்டா - -ஜியோ மாநில ஒருங்கிணைப்பா ளர்களிடம் அரசு தரப்பில் தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகி றது.
ரகசிய பேச்சு
போட்டா ஜியோ ஒருங்கிணைப்பாளர்களி டம் காலை 11 மணிக்கும், ஜாக்டோ - ஜியோ நிர்வா கிகளிடம் காலை 11.30 மணிக்கும் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென் னரசு, னரசு, அன்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதில் ககன்தீப் சிங் பேடி குழு பரிந்துரைத் துள்ள பென்ஷன் திட் டம் குறித்தும், அதை எப்போது செயல்படுத் துவது என்பது தொடர் பாக முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜன. 3) முக்கிய அறிவிப்பை வெளியிடு வார் என்றும் அமைச்சர் கள் குழு பேச இருப்பதாக கோட் கோட்டை வட்டாரத்தில் கூறினர்.
இந்த பேச்சுவார்த் தைக்கு வெளிப்படை யாக அழைப்பு விடுக்க வில்லை. குறிப்பிட்ட இரு
அமைப்புகளுக்கு மட்டும் அமைச்சர்கள் குழு செல் போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 22ம் தேதி நடந்த பேச் சுவார்த்தையின் போது, பேச அனுமதிக்கவில் என்ற குற்றச்சாட்டு எழுந் தால் எல்லாரையும் ஒரே நேரத்தில் அழைத்து பேசி னால் மீண்டும் குழப்பம் ஏற்படும் என்று அரசு தரப்பு கருதியது.
எனவே குறிப்பிட்ட இரு அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப் பாளர்களில் ஓரிருவர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோவில் மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் 30 பேர் உள்ளனர்.
அவர்கள் இதை எவ் வாறு கையாளப் போகி றார்கள் என்பது கேள் விக்குறியாக உள்ளது. இதற்கிடையில் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங் கிணைப்பாளர்கள் சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்கக் கட்டடத் தில் இன்று காலை 9.30 மணிக்கு கூடி, அமைச் சர்களுடனான பேச்சு வார்த்தை தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
அதைத் தொடர்ந்து தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது
Thursday, January 1, 2026
New
ரகசிய அழைப்பு - அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் இன்று பேச்சு - ஜனவரி 6 போராட்டத்தை முறியடிக்க அரசு இறுதி முயற்சி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.