TRB - 15-12-2025 Press News - 2708 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள் நிரப்புதல் - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 16, 2025

TRB - 15-12-2025 Press News - 2708 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள் நிரப்புதல் - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு



TRB - 15-12-2025 Press News - 2708 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள் நிரப்புதல் - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு

15-12-2025 - ASSISTANT PROFESSOR IN TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE FOR GOVERNMENT ARTS & SCIENCE COLLEGES AND GOVERNMENT COLLEGES OF EDUCATION – 2025 - Press News

Teachers Recruitment Board on October 16, 2025, to fill 2708 assistant professor vacancies in government arts and science colleges and government educational colleges via direct recruitment. The notification clearly stated that candidates should apply for only one subject. However, it is now announced that candidates who applied for more than one subject in violation of this rule will be allowed to write the competitive exam for only one subject of their choice.

2708 assistant professor vacancies are being filled.

The original notification (No. 04/2025) mandated applying for only one subject.

Candidates who applied for multiple subjects will now be allowed to take the exam for one subject they prefer. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவது சார்ந்த அறிவிக்கை எண்.04/2025, நாள்.16.10.2025 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.

இவ்வறிக்கையில் தேர்வு நாள். கல்வித்தகுதிகள். தேர்வு முறை. தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள் உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கல்லூரிக் கல்வி ஆணையரகத்திடமிருந்து பெறப்பட்ட தெளிவுரையின் அடிப்படையிலும், இவ்வறிவிக்கையில் பக்கம் எண்.16, பத்தி எண்.8(ix)லும் மற்றும் பக்கம் எண்.31, பத்தி எண். 18(f)லும் ஒரு பணிநாடுநர் ஒரே ஒரு பாடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும் எனவும் (The candidates should apply for only one subject) ஒன்றிற்கும் மேற்பட்ட பாடத்திற்கு பணிநாடுநர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டாது (The candidates will not be allowed to submit more than one application) எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்படி அறிவிக்கைக்கு மாறாக, ஒன்றிற்கு மேற்பட்ட பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் அவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டுமே இப்போட்டித்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD TRB - 15-12-2025 Press News PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.