ஆசிரியர்களுக்கு RIESI பெங்களூரில் 30 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி - DEE Proceedings
CLICK HERE TO DOWNLOAD ஆசிரியர்களுக்கு RIESI பெங்களூரில் 30 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி - DEE Proceedings PDF
RIESI Bangalore 30 Days CELT Programme Bengaluru
பெங்களூரு RIESI நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி - ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியலை அனுப்ப இயக்குநர் செயல்முறைகள்
ஆசிரியர்களுக்கு RIESI Bangalore 30 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.
ந.க.எண். 16098/எப்1/2025, நாள். (6.12.2025. -
பொருள் தொடக்கக் கல்வி - RIESI, Bangalore 30 Programme
பார்வை -05.01.2026 முதல் 03.02.2026 Days CELT வரை தொடக்க/நடுநிலைப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் - இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் சார்பாக.
Regional Institute of English, South India, Letter No. RIE/TRG/CELT/PRY-CRS-2/K1-TN-TG/2025-2026/302, Dated.09.12.2025. பார்வையில் காணும் கடிதத்தின்படி, The Regional Institute of English, South India (RIESI), Bangalore மூலமாக தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 05.01.2026 முதல் 03.02.2026 வரை 30 Days CELT Programme பயிற்சியானது உண்டு உறைவிட பயிற்சியாக வழங்கப்படவுள்ளது. மேலும், இப்பயிற்சியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, தங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே இப்பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்களைத் தவிர்த்து பிற தொடக்க/நடுநிலைப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர்களுள், ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம், RIESI, Bangalore- லிருந்து பெற்றப்பட்ட கடிதத்தில் (இணைக்கப்பட்டுள்ளது) தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளைப் பின்பற்றி, தேர்ந்தெடுத்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்தும்,பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கையொப்பமிட்டு Scan செய்து 19.12.2025-க்குள் deef2sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்டக்கல்வி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு.
1. பார்வையில் காணும் கடித நகல்.
2. படிவம். அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) 20 தொடக்கக் கல்வி இயக்குநர்.
பெறுநர்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மின்னஞ்சல் மூலமாக.
CLICK HERE TO DOWNLOAD ஆசிரியர்களுக்கு RIESI பெங்களூரில் 30 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி - DEE Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.