DGE - NMMS Uploading Instruction Published
official announcement from the Directorate of Government Examinations, Chennai, regarding the online registration process for the National Means-cum-Merit Scholarship Scheme (NMMS) Examination scheduled for January 10, 2026.
The examination is for students currently in eighth grade at government and government-aided schools.
Application forms were available for download from December 12, 2025, to December 15, 2025.
Headmasters can upload student details online via the official website (www.dge.tn.gov.in) from December 16, 2025, to December 20, 2025
NMMS Examination Jan 2026 - மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம்! Student registration is based on the EMIS system, and schools use their USER ID and PASSWORD to access and correct student details. New schools must register first using the provided procedures before uploading student information. Details like student name, parent/guardian name, date of birth, Aadhaar number, gender, and mobile number must match the EMIS data. The parent's active mobile number must be provided and kept unchanged for at least five years, as it will receive important messages and OTPs regarding the scholarship
பொருள்
: அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS), ஜனவரி 2026 பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக.
பார்வை:
இதே எண்ணிட்ட இவ்வலுவலகக் கடிதம் நாள்.12.12.2025
2025-2026-ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS), 10.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 12.12.2025 முதல் 15.12.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
பதிவேற்றம் செய்தல் தொடர்பான விவரங்கள்;-
மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in இணையதளம் வழியாக 16.12.2025 முதல் 20.12.2025 வரை பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை /உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. அறிவுரைகள்
1. கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் EMIS-ன் அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID, PASSWORD- ஐ பயன்படுத்தி மாணவர்களின் EMIS எண்ணினை பதிவு செய்தவுடன் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும். அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பிள், திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும். முதன் முறையாக இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் புதிய பள்ளிகள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு (Register) செய்த பின் புதிய USER ID, PASSWORD-ஐ பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
2. DGE Portal ல் பதிவேற்றம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்:
NMMS தேர்வுக்கு மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் (மாணவரின் பெயர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் எவ்வாறு இடம் பெற வேண்டுமோ அதன்படி) EMIS இணையதளத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு அதன் பின்னர் DGE Portal ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாணவர் பெயர், தந்தை / பாதுகாவலர் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண், பாலினம், கைபேசி எண் போன்ற விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்திருக்க வேண்டும்.
மாணவரின் பெற்றோர் பயன்படுத்தும் நடைமுறையில் உள்ள கைபேசி எண்ணையே அளிக்க வேண்டும். உதவித் தொகை சார்ந்து அவ்வப்போது குறுஞ்செய்தி அல்லது கடவுச்சொல் (OTP) விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கே அனுப்பப்படும் என்பதால் அக்கைபேசி எண்ணை குறைந்தது தொடரும் ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றாமல் இருக்கவேண்டும். 3. தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதனைப் பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்த பிள்னர் பதிவேற்றம் செய்ப வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை மாணவர்களிடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்று உறுதி செய்த பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
5. பள்ளி முகவரி என்ற கலத்தில் பள்ளியின் பெயர், முகவரியினை அஞ்சய் குறியீட்டுடன் (Pin Code) பதிவு செய்யப்படவேண்டும்.
வீட்டு முகவரி என்ற கலத்தில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினை பதியக்கூடாது. தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்.
பெற்றோரின் தொலைபேசி/கைப்பேரி என்ற கலத்திலும் பெற்றோர் அல்லது பாதுகாவளின் தொலைபேசி கைபேசி எண்ணையே பதியிட வேண்டும். பள்ளியின் தொலைபேசி என்ற கலத்தில் மட்டும் பள்ளியின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும்.
8. பதிவு செய்த விவரங்களை Declaration form Print out கொண்டு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் தேர்வுக் கட்டணத்தினை செலுத்துவதற்குள் சரி செய்து கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்திய பின் எந்த பதிவுகளும் கண்டிப்பாக மாற்ற இயலாது.
10. மேற்படி தேர்விற்கான ஆன்லைன் கட்டணம் ரூ.50/- வீதம் DGE Portal o ஆன்லைனில் அனைத்து விண்ணப்பங்களும் பதிவேற்றம் செய்த பிறகு ஆன்லைன் கட்டணத்தை செலுத்த வேண்டும் ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி நாள். 20.12.2025 06.00 பதிவேற்றம் முடிந்தவுடன் விண்ணப்பித்த தேர்வர்களின் விவரப்பட்டியலினை (Summary Report) (ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம் ஆன்லைன் கட்டணம் செலுத்திய பின் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலர்களிடம் 22.12.2025-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிஷார வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பித்த பள்ளிகளில் இருந்து ஆன்லைன் கட்டணத் தொகை தேர்வர்களின் எண்ணிக்கைக்கேற்ப சரியாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உதவி இயக்குநர்கள் உறுதி செய்து சரிபார்த்து கொள்ள வேண்டும். 20.12.2025 விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் காலம்: 16.12.2025
விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 20.12.2025
ஆன்லைன் கட்டணம் செலுத்த இறுதி நாள். 20.12.2025
Summary Report உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள். 22.12.2025
நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பிறகு எக்காரணத்தை முன்னிட்டும் வாய்ப்பளிக்க இயலாது எனவும், புறச்சரக எண் (Out of Range number) கண்டிப்பாக வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் உரிய இணைப்புச் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட பணி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மாணவர்களின் நலன் கருதி தங்களின் முழு ஒத்துழைப்பை நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
CLICK HERE TO DOWNLOAD DGE - NMMS Uploading Instruction PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.