அனைத்து வகை கல்லுாரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உயர் கல்வித் துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 2, 2025

அனைத்து வகை கல்லுாரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உயர் கல்வித் துறை உத்தரவு

அனைத்து வகை கல்லுாரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உயர் கல்வித் துறை உத்தரவு


பேரிடர் மேலாண்மை குழு கல்லுாரிகளில் அமைக்க உத்தரவு

'அனைத்து வகை கல்லுாரிகளிலும், பேரிடர் மேலாண்மை குழு அமைக்க வேண்டும்' என, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், புயல் மழை, இயற்கை சீற்றத்திற்கு முன்னரும், பின்னரும், கல்லுாரிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, உயர் கல்வித்துறை செயலர் சங்கர், அனைத்து பல்கலை பதிவாளர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

புயல், மழை, இயற்கை பேரிடர் காலங்களில், கல்வி நிறுவன தலைவர் தலைமையில், பேரிடர் மேலாண்மை குழு அமைக்க வேண்டும்.

முதலுதவி குழு, தகவல் தொடர்பு அலுவலர், காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள், மருத்துவமனை, அவசர சிகிச்சை மையங்கள், போக்குவரத்து சேவைகள் குறித்த விபரங்களை, கல்லுாரி நிர்வாகம் வைத்திருக்க வேண்டும்.

கல்லுாரிகளில் மின் சாதனங்கள் முறையாக இல்லையெனில், சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லுாரி வளாகங்களில், சாய்ந்த நிலையில் உள்ள மரங்களை, பேரிடர் மீட்பு துறை உதவியுடன் அகற்ற வேண்டும். சேதமடைந்த கட்டடங்களை உடனடியாக சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.