"16 வருட காலமாக ஏற்றத்தாழ்வு" - இடைநிலை ஆசிரியர்கள் வேதனை
இடை நிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் நேற்று முன்தினம் பள்ளிக் கல்வி இயக்குனரக அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர்.
கடந்த சனிக்கிழமையும் சென்னையில் கூடிய அவர்கள் எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர்.
நேற்றும் 3 வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதையடுத்து இன்றும் 4 வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். சென்னை எழிலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையின் நடுவே அமர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தின் போது இடைநிலை ஆசிரியர்கள் தாங்கள் 16 வருட காலமாக வேதனையில் உள்ளதாக தெரிவித்தனர்
2009 மே 31ம் தேதிக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களும் அதற்கு ஒரு நாள் பின்னர் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் ஊதிய விகிதத்தில் பெரும் அளவு வித்தியாசம் இருப்பதாகவும் இன்றைய தேதியில் அந்த வித்தியாசம் பல ஆயிரங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தனர்
மேலும் ஒரே நிலையில் உள்ள இரு வேறு தேதிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இவ்வளவு பெரிய ஊதிய வித்தியாசம் இருப்பது பணியில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர். மேலும் கடந்த 16 வருட காலமாக சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் பிற ஆசிரியர்களை விட மிகக் குறைந்த ஊதியத்தில் பணி செய்து வருவதாக தெரிவித்தனர்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் கடந்த கால போராட்டங்களின் போது தங்களுக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு ஆட்சிக்கு வந்தவுடன் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்
அவ்வாறு அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தரும்படி தற்போது நாங்கள் போராடி வருவதாகவும் தமிழக அரசு இதனை நிச்சயம் நிறைவேற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று தங்கள் நம்புவதாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்தனர்
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.