No compromise until the government order regarding the old pension scheme is issued - The history of the 2016 protest must be repeated, government employees express their anger. -
பழைய பென்ஷன் திட்டம் குறித்த அரசாணை வெளியிடும் வரை சமரசம் கூடாது - 2016 போராட்ட வரலாறு திரும்பணும் அரசு ஊழியர்கள் ஆவேசம்
அரசிடம் பேச்சுவார்த்தைக்கு செல்லும் நிர்வாகிகளிடம் திட்டவட்டம் - .தினமலர் செய்தி
Strike Call: JACTO-GEO called for an indefinite strike starting January 6th.
Core Demand: Immediate implementation of the old pension scheme, a promise made by the DMK government during the last assembly elections that has not yet been fulfilled.
Union Stance: Members demand the strike not be postponed until a government order is issued, wanting a repeat of the 2016 protest history.
Government Action: A committee led by senior IAS officer Gagandeep Singh Bedi was formed to study the pension implementation, and the government is holding talks with union representatives on December 22.
சமரசம் கூடாது
நமது நிருபர்
பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்ப டுத்த வலியுறுத்தி, வரும் ஜனவரி 6ம் தேதி முதல், கால வரையற்ற போராட் டத்துக்கு ஜாக்டோ- ஜியோ அழைப்பு விடுத்துள்ளதை தொடர்ந்து சங்க நிர்வாகி களுடன் நாளை தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த உள்ளது. 'பேச்சு வார்த்தைக்கு செல்லும் சங்க நிர்வா கிகள், பழைய பென்ஷன் திட்டத் துக்கான அரசாணை வெளியிடும் வரை, வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்கக் கூடாது. 2016 போன்று 2026ல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற வேண்டும்' என்று பல் வேறு சங்க உறுப்பினர் கள், ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
புதிய பென்ஷன் திட் டத்தை ரத்து செய்துவிட்டு
பழைய பென்ஷனை மீண் டும் அமல்படுத்த வேண்
பழைய பென்ஷன் திட்டம் குறித்த அரசாணை வெளியிடும் வரை...
அரசிடம் பேச்சுவார்த்தைக்கு செல்லும் நிர்வாகிகளிடம் திட்டவட்டம் 2016 போராட்ட வரலாறு திரும்பணும்: அரசு ஊழியர்கள் ஆவேசம்
டும் என்று அரசு ஊழியர், ஆசிரியர்கள் கடந்த 22 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சட்டசபை தேர்த லின் போது வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதி இன்று வரை நிறைவேறவில்லை.
இதற்காக, பென்ஷன் அமல் குறித்து ஆராய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்
சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் இறுதி அறிக்கை வெளியகவில்லை.
பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, வரும் ஜனவரி 6ம் தேதி முதல், காலவரை யற்ற போராட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பென்ஷன்குழுவிடம் அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்
டது. அந்த ஆலோசனை யைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் நாளை (டிச. 22) பேச்சு வார்த்தை நடத்துவதாக தமிழக அரசு அறிவித்தது. அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொண்ட குழு, அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் சங் சுத்திடம் பேச்சுவார்த்தை
சமரசம்...
நடத்துவர் என்று தமிழக அரசு அறிவித்தது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தும் வரை கோரிக்கையில் இருந்து பின்வாங்கப் போவ தில்லை என்று ஜாக்டோ ஜியோதிட்டவட்டமாக கூறியுள்ளது.
அதேநேரம், இதற்கு முன்பு, இப்படித்தான் போராட்டம் அறிவிப்ப நும், பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிடுவதுமாக இருந்து வருகிறது.
இந்த முறை அதுபோன்ற நிலை ஏற் படக் கூடாது என்று பல் வேறு அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
தெறிக்கவிடும் பதிவு
இந்த நிலையில், பேச்சுவார்த்தை எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பாக அரசு ஊழி யர்கள் சமூகவலைதளங்க ளில் தெறிக்கவிட்ட பதிவு:
ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களை அழைந்து 3 அமைச்சர்கள் டிச. 22 (நாளை)ல் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள் ளது. இந்த பேச்சுவார்த்தை முதல் கற்றாக இருக்கும். வரும் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் கப்பட்டு உள்ளதால், இன்னும் சில சுற்று பேச்சு வார்த்தைகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
பேச்சுவார்த்தை என் பது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறச் செய்வதற் ஒரு ஏற்பாடாக இருக்க கூடாது. பேச்சு வார்த்தையில் கோரிக்கை களை நிறைவேற்றாமல், அரசு தரப்பில் வெறும் வாக்குறுதி மட்டும் அளிக் கப்பட்டால், அதை புறக் கணித்து இட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அவ்வாறு வேலை நிறுத்தத்தை துவங் குவதுதான் தொழிற்சங்க வரலாற்றில் பாரம்பரிய நடைமுறை.
2016 தந்த அனுபவம்
2016ம் ஆண்டு மாதி லத் தலைவர்தமிழ்செல்வி அறிவிக்பொதுச்செயலாளர் பால சுப்பிரமணியன் தலைமை யில் செயல்பட்ட தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் 2016 பிப்ரவரி 10ம் தேதி
முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித் தது.
சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன். கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங் கம் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தார். அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைச்
2016 பிப்ரவரி 10ம் தேதி போராட்டம் அறி வித்திருந்த நிலையில், அந்த குழு பிப்ரவரி 7, 8, 9 ஆகிய 3 நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தியது.
இதில் சிலர் பேச்சு வார்த்தை திருப்திகரமாக இருப்பதாக கூறி போராட் டத்தில் இருந்து பின் வாங்கினர். அதேநேரம் முதல்வர் ஜெயலலிதா
எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால்தான் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுவது என அரசு ஊழி யர்கள் சங்கம் அறிவித்தது.
ஆனால், எழுத்துப் பூர்வ வாக்குறுதியை அமைச்சர்கள் குழு அளிக் காததால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங் கியது.
அதன் விளைவாக, அரசு ஊழியர்களுக்கான 'சிபிஎஸ்' தொகையை ஒரே தொகையில் தருவது என்பது உட்பட 11 அறிவிப்புகளை அன்றைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதி யின் கீழ் அறிவித்தார். அதையடுத்து 2016 பிப்ர வரி 20 முதல் காலவரை யற்ற வேலை நிறுத்தம்
ஒத்தி வைக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தை எப்படியாவது ஒத்தி வைக்க வேண்டும் என்ற
எண்ணத்துடன் பேச்சு வார்த்தைக்கு செல்லக் கூடாது. வாக்குறுதியை நம்பி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்கக் கூடாது. பழைய பென்ஷன் திட்டம் உட்பட கோரிக்கைகள் தொடர்பான அரசாணை வெளியிடும் வரை வேலை நிறுத்தத்தை எக்காரணம் கொண்டும் ஒத்தி வைக்கக் கூடாது. 2016 போன்று 2026ல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடை பெற வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அதில்
இதன் மூலம் வாக்கு றுதிகளை நம்பி ஜாக்டோ ஜியோ பின்வாங்கிடக் கூடாது என்பதற்காக அரசு ஊழியர்கள் சிலர் இவ் வாறு சமூகவலைதளங் களில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
Negotiation Date:
Three ministers are scheduled to hold talks with the associations on December 22.
Strike Date:
The indefinite strike is planned to begin on January 6.
Associations' Stance:
JACTO-GEO maintains it will not back down until the old pension scheme is implemented.
Historical Context:
A similar strike in 2016 was called off after negotiations, a situation many hope to avoid repeating.
Sunday, December 21, 2025
New
பழைய பென்ஷன் திட்டம் குறித்த அரசாணை வெளியிடும் வரை சமரசம் கூடாது - அரசிடம் பேச்சுவார்த்தைக்கு செல்லும் நிர்வாகிகளிடம் திட்டவட்டம்
What is new and old pension scheme?
Tags
Central Government Employees,
Government Employees,
Old pension scheme,
What is new and old pension scheme?
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.