அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (School ITI) நிறுவுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Procedures of the Director of School Education regarding establishment of Industrial Training Centers (School ITI) in Govt High / Higher Secondary Schools
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6
ந.க.எண். 077728/பிடி 2/இ2/2025
நாள். .12.2025.
பொருள்:
பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் School(ITI) நிறுவுதல் சார்ந்து.
பார்வை : பள்ளிக் கல்வி இயக்கக இயக்குநருடன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் நடைபெற்ற கூட்டம் நாள். 04.12.2025. பார்வையில் காணும் பொருளின்படி, பள்ளிக் கல்வி இயக்கக இயக்குநர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருடன் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் School (ITI) அமைப்பதற்கான செயல்முறை மற்றும் தகுதித் தணிக்கைகள் (Criteria) குறித்து ஆலோசித்து அதில் கீழ்க்கண்ட வசதிகள் கொண்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் விவரம் கோரப்படுகிறது. 1. ஒவ்வொரு பள்ளியிலும் ITI-க்கு குறைந்தபட்ச நிலத் தேவையாக 0.5- ஏக்கர் (50 சென்ட்) நிலம் இருக்க வேண்டும்.
2. ஏற்கனவே கட்டப்பட்ட செய்முறை அறைகள், ஆய்வகங்கள் அல்லது பிற கட்டிடங்கள் பயன்பாடின்றி அல்லது குறைந்த பயன்பாட்டில் இருக்கும் நிலையில் இருந்தால் அத்தகைய பள்ளிகளை ITI-அமைப்பதற்கு பயன்படுத்தலாம்.
3. தொழில் பயிற்று நிலையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
4 தொழில் மண்டலங்கள் / தொழில் சாலைகள் / தொழில் துறை பகுதிகளுக்கு அருகிலுள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதன் மூலம் தொழில் தொடர்புகள் மற்றும் மாணவர்களின் வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
ஆகவே மேற்காண் வசதிகள் கொண்டுள்ள அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஒரு வார காலத்திற்குள்அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: படிவம்
பள்ளிக் கல்வி
பெறுநர்:
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
நகல்:
1. சென்னை 09. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்படுகிறது.
2. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்படுகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.