ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 2, 2025

ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

The Director of School Education has ordered the government to award certificates of appreciation to teachers for their new efforts!

ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06 5.5.5.0028/8/83/2025, . 17.11.2025.

முன்னிலை: முனைவர் ச.கண்ணப்பன்

பொருள்

அரசு தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் : பள்ளிக்கல்வி பாராட்டுச் சான்றிதழ் வழங்க -பள்ளிகள் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக அரசின் ஆணை பெறப்பட்டது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பு.

பார்வை:

அரசாணை (நிலை) எண்.125. பள்ளிக்கல்வித்(பக5(1)) துறை, श्री. 21.05.2025.

பார்வையில் காணும் அரசாணையில் கற்றல் அனுபவத்தை புதுமையாக மாற்றியமைத்தலில் மேன்மை ஏற்படுத்திய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலை அங்கீகரிக்கவும். ஆசிரியர்களின் அசாதாரண சிந்தனை திறன் அவர்களின் மாணவர்களுக்கான கல்விப் பயணத்தை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு செயல்பாடுகளை சீரமைக்க சக ஆசிரியர்களை தூண்டும் வகையில் செயல்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை செயல்படுத்தும் விதமாக 2025-26 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அரசு தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்களை தெரிவு செய்து இச்சான்றிதழ் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி அரசு தொடக்க/நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக்கல்வித் (பக5(1)) துறை அரசாணை (நிலை) எண்.125 फ्री: 21.05.2025.

திருவள்ளுவர் ஆண்டு 2056. விசுவாவசு வருடம், வைகாசி-11,

படிக்கப்பட்டவை:-

பள்ளிக்கல்வி இயக்குநர் கடித 5.6..0028/2/1/2025. .12.05.2025

ஆணை

மேலே படிக்கப்பட்ட கடிதத்தில், பள்ளிக்கல்வி இயக்குநர் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்:-

(1) கற்றல் அனுபவத்தை புதுமையாக மாற்றியமைத்தலில் மேன்மை ஏற்படுத்திய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலை அங்கீகரிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கலாம் என்றும், சிறந்த ஆசிரியர்கள் தங்கள் கற்றல், கற்பித்தல் முறைகளை மாறிவரும் காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து, தொழில்நுட்பத்தை உட்புகுத்தி மற்றும் மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் சூழல்களை வடிவமைத்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செயல்படுத்தி மாணவர்களின் கற்றல் அடைவுகளை முன்னேற்றி உள்ளனர்.

(ii) இத்தகைய ஆசிரியர்களின் அசாதாரண சிந்தனைதிறன் அவர்களின் மாணவர்களுக்கான கல்விப்பயணத்தை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வகுப்பறைக்குள் உள்ள பல்வேறு செயல்பாடுகளை சீரமைக்க சக ஆசிரியர்களை தூண்டும் விதமாக அமைகிறது என்றும், டிஜிட்டல் கருவிகள், செயல்திட்ட அடிப்படையிலான கற்றல், கற்பித்தல் முறைகள், அனுபவக்கல்வி முறைகள் அல்லது பல்வேறு பாடங்களுக்கு இடையேயான அணுகுமுறைகள் முதலானவற்றை ஒருங்கிணைத்து இவ்வாசிரியர்கள் கற்பித்தல் மூலம் கற்றல் அடைவுகளை மாணவர்களிடத்தில் தரமாகக் கொண்டு செல்வதுடன் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். (日) எனவே. இத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவர்களின் எதிர்கால வெற்றியை வடிவமைப்பதில் ஆக்கப்பூர்வமாக பங்காற்றி வருவதால் இவர்களை கவுரவிக்கும் பொருட்டு பாராட்டுச் சான்றிதழ் அரசால் வழங்கப்படலாம் என்றும். இத்தகைய புதுமையை ஆசிரியர்களையும் அங்கீகரிக்கும் நோக்கத்தோடு இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்க பிற ஆசிரியர்களுக்கு புதுமையினை கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை உட்புகுத்த வழிகோலும் என்பதில் ஐயமில்லை. செயல்படுத்தும் அனைத்துப் (iv) ஆண்டுதோறும் அரசு/தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் தெரிவ செய்து Βασασσι πλακό வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது என்றும், 2025-25-ஆம் ஆண்டில் 380 ஆசிரியர்கள் இத்திட்டத்தின் கீழ்பயன் பெறுவார்கள். 10

2. எனவே, மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மாவட்ட அளவில் 10 ஆசிரியர்களை தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து இச்சான்றிதழை வழங்குவர் என்றும், தெரிவு செய்யும் குழுவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் அல்லது அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஆகியோர் கொண்ட உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் எனத் தெரிவித்து, இதற்கென ரூ. 1.20,000/-ஐ தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்.

3. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து அதனை ஏற்று, அரசு தொடக்க/நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் புதிய முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் மாவட்ட அளவில் 10 ஆசிரியர்களை தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து சான்றிதழ் வழங்குவதற்கு ஏதுவாக, மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர், அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் அல்லது அரசுக் கலைக் கல்லூரி முதல்வர் ஆகியோரை உறுப்பினர்காளக்கொண்டு ஒரு குழு அமைப்பதற்கும் மற்றும் மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிட 1,20,000/- -3-

தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுமதி வழங்கலாம் என முடிவு செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.