TNCMTSE - DGE procedures regarding the online uploading of details of students who have applied! - TNCMTSE - விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக DGE செயல்முறைகள்!
இயக்குநர்
அரசுத் தேர்வுகள் இயக்ககம்.
சென்னை-600 006.
...017342(3/2004
பெறுநர்
அனைத்து முதன்மைக்கல்வி அலுவவர்கள், அனைத்து மாவட்டங்கள் : 24.12.2025
ஐயா/அம்பையிர்,
பொருள்:
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-06 தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு- 2025-2026 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் விண்ணப்பித்தோர் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பார்வை:
1. இவ்வலுவலக அறிவிப்பு, நாள். 12.12.2025.
2. இவ்வலுவலக கடிதம் இதே எண்ணிட்டக் கடிதம், . 12.12.2025
பார்வை -2ல் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில் 31012026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்விற்கு" விண்ணப்பிக்க விரும்பும். அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்கள் www.dge.tn.gov.in இணையதளம் வழியாக விண்ணப்பப் படிவங்களை 18.12.2025 முதல் 26.12.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்தல் தொடர்பான விவங்கள்
மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும். தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணக்கர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 28.12 2025 பிற்பகல் முதல் 03.01 2026 வரை பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அறிவுரைகள்
1 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் UDISE CODE-ஐ பயன்படுத்தி, இத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் EMIS எண்ணினைப் பதிவு செய்தவுடன் சம்மந்தப்பட்ட மாணவனின் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும். இவ்வாண்டு புதியதாக விண்ணப்பிக்கும் பள்ளிகள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு (Register) செய்த பின் புதிய USER ID, PASSWORD ஐ பயன்படுத்தி மாயாவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். பதிவேற்றம் செய்யும் போது நிளையில் கொள்டிவிவரங்க
2. தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரியானதா என்பதனை பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3. பள்ளி முகவரி என்ற கலத்தில் பள்ளியின் மெயர், முகவரியினை அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் (Pin Code) பதிவு செய்ய வேண்டும்.
4. வீட்டு முகவரி என்ற கலத்தில் தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதிவு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினை பதியக்கூடாது.
5. பெற்றோரின் தொலைபேசி/அலைபேசி என்ற கலத்திலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி /அலைபேசி எண்ணையே பதிய வேண்டும். 6. பதிவேற்றம் செய்த விவரங்களை ஒப்புகைச் சீட்டைக் கொண்டு தேர்வரின் விவரங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
7. மேற்படி தேர்விற்கான தேர்வுக் கட்டணம் ரூ.50/- வீதம் Online -இல் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்த இறுதி நாளான 03.01.2028 ல 06.00 மணிக்குள் Online -இல் தேர்வுக்கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
8. பதிவேற்றம் செய்த விவரங்களில் பிறந்த தேதி (Date of Birth), இனம் (Community), மாற்றுத் திறனாளி (PH Candidate) ஆகிய விவரங்களில் மாற்றம் செய்யவேண்டியிருந்தால் தேர்வுக் கட்டணத் தொகை செலுத்துவதற்கு முன்னரே சரி செய்து கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்திய பின்னர் எந்த பதிவுகளையும் கண்டிப்பாக மாற்ற இயலாது. இத்தேர்விற்கான தெரிவுப்பட்டியல் (Selection List) வெளியிட்ட பின்னர், திருத்தங்கள் கோராத வகையில்,
தற்போது ஆன்லைனில் விவரங்கள் பதிவு செய்யும் போதே சரியான விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
9. பதிவேற்றம் முடிந்தவுடன் தேர்வர்களின் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் (Summary Report) சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரிடம் 03.012026 -க்குள் அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் ஒப்படைக்க வேண்டும்.
10. தபால்கள் வாயிலாக தலைமையலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
விண்ணப்பித்த பள்ளிகளில் தேர்வுக் கட்டணத் தொகை ஆன்லைனில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உதவி இயக்குநர்கள் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் காலம்: 26.12.2025 பிற்பகல் முதல் 03.01.2026 வரை
விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 03.012026
தேர்வுக்கட்டணம் Online -இல் செலுத்த வேண்டிய கடைசி நாள்.03.012026
> பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் (Summary Report) மற்றும் தேர்வுக்கட்டண செலுத்துச் சீட்டை (Fees Receipt) உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள்: 03.01.2026
தேர்வரின் விண்ணப்பங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டுக்களை சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தம்வசம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.