தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் Apprenticeship Training Admission Camp
தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் - விழுப்புரம் மாவட்டம்
தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் தொழிற்பழகுநர்களைச் சேர்ப்பதற்கான மாவட்ட அளவிலான முகாம் நடைபெறவுள்ளது.
முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம்:
நாள்: 08.12.2025, திங்கட்கிழமை
நேரம்: காலை 9.30 மணி முதல்
இடம்: மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், முதல் தளம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம்.
கலந்து கொள்ளும் நிறுவனங்கள்:
இம்முகாமில், விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC), தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB), சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள், கனரக வாகன தொழிற்சாலை (HVE), ICF, NLC மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் போன்ற அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. நன்மைகள் மற்றும் வாய்ப்புகள்:
பயிற்சி இடங்கள்:
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்களை நிரப்ப நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. பயிற்சி விவரம்:
என்சிவிடி (NCVT) சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது நேரடியாகத் தொழிற்சாலைகளில் பிரஸ்ஸர் அப்ரண்டிஸ்ஸாக சேரலாம்.
பிரஸ்ஸர் அப்ரண்டிஸ்ஸுக்கு:
3 முதல் 6 மாத கால அடிப்படைப் பயிற்சியும், அதைத் தொடர்ந்து ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் வழங்கப்படும்.
சான்றிதழ்: பயிற்சி முடிவில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.
உதவித்தொகை: பயிற்சியின்போது நிறுவனத்தால் மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 9,600 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.