தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. முன்னிலை: முனைவர்.ச.கண்ணப்பன். ந.க.எண்.000169/அ1/இ1/2025, நாள்.02.12.2025.
பொருள்: தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு - நிருவாக நலன் கருதி - மாறுதல் வழங்கி - ஆணையிடுதல் - சார்பு.
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில், வகுப்பு IV-இன்கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் கீழ்க்காணும் அலுவலர்களுக்கு நிருவாக நலன் கருதி அவர்களது பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகங்களுக்கு மாறுதல் வழங்கி இதன்வழி ஆணையிடப்படுகிறது.
DEO Transfer List - 21 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு PDF மேற்காணும் பட்டியலில் வரிசை எண்.01 முதல் 21 வரை கண்டுள்ளவாறு மாறுதல் அளிக்கப்பட்டுள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலர்களிடம் தமது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர்கள் தமது மாவட்டத்தில் மாறுதல் அளிக்கப்பட்டுள்ள மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு பதிலாக மாவட்டத்தில் உள்ள அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களில் இருந்து பணியில் மூத்த ஒருவரை பொறுப்பு அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கிவிட்டு உரிய பின்னேற்பின் பொருட்டு கருத்துருக்களை இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்டக்கல்வி பொறுப்பு அலுவலர்கள் நியமனம் சார்ந்து எவ்வித தாமதமும் ஏற்படக்கூடாது எனவும் சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
பணிவிடுப்பு / பணியில் சேர்ந்த அறிக்கை மற்றும் பொறுப்பு ஒப்படைப்பு சான்றிதழ் (CTC) உடனடியாக மறுநினைவூட்டுக்கு இடமின்றி இவ்வியக்ககத்திற்கும் தொடர்புடைய இயக்ககம் / முதன்மைக்கல்வி அலுவலர் / மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பெறுதல்: சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலர்கள்.
நகல்:
1. சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வி இயக்குநர்
2. சம்பந்தப்பட்ட கருவூல அலுவலர்கள் / மாவட்டக்கருவூல அலுவலர்கள்
3. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை-06.
4. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை-06.
5. அரசு செயலாளர், பள்ளிக்கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-09.
(தகவலின்பொருட்டு பணிந்தனுப்பப்படுகிறது).
DEO Transfer List - 21 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.