கல்வித்துறை அலுவலர்களிடம் பணம் பிடிபட்ட வழக்கு - ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்திற்கு மாற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 13, 2025

கல்வித்துறை அலுவலர்களிடம் பணம் பிடிபட்ட வழக்கு - ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்திற்கு மாற்றம்

கல்வித்துறை அலுவலர்களிடம் பணம் பிடிபட்ட வழக்கு

ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்திற்கு மாற்றம் Case of money seized from education department officials - transferred to Disciplinary Tribunal ஸ்ரீவில்லிபுத்துார், நவ. 14-ரம் பணம் கைப்பற்றிய வழக்கை திருநெல்வேலி ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்திற்கு மாற்றம் செய்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதி விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், அவரது நேர்முக உத வியாளர் செல்வராஜா, இளநிலை உதவியாளர் சாணக்கியன் ஆகியோரி டம் இருந்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.3 லட்சத்து 13 ஆயி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 நவ.7ல் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை செய்ததில் அப்போதய நேர்முக உதவியாளர் செல் வராஜாவிடமிருந்து ரூ.13 ஆயிரம், முதன்மை கல்வி அலுவலர் ராமன் வீட்டிலி ருந்து ரூ.3 லட்சம் கணக் கில் வராத பணமாக கைப் பற்றப்பட்டது.

இது தொடர்பாக 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத் தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த பணம் கலெக் டரின் அனுமதி இன்றி அரசு உதவி பெறும் பள் ளிகளின் நிர்வாகிகளிடம் இருந்து புத்தகத் திருவிழா நன்கொடை என்ற பெய ரில் லஞ்சமாக பெறப்பட் டதாக நிரூபிக்க நேரடி ஆவணங்களோ, சாட்சி களோ இல்லாததால் அவர் கள் மீது ஒழுங்கு நடவ டிக்கை தீர்ப்பாயம் மூலம் நடவடிக்கை மேற்கொள் ளலாம் என விசாரணை அதிகாரி பரிந்துரையின் பேரில் பள்ளி கல்வித் துறை செயலர் உத்தர விட்டிருந்தார்.

இந்த உத்தரவை ஏற்று, இவ்வழக்கினை திருநெல் வேலி ஒழுங்கு நடவ டிக்கை தீர்ப்பாயத்திற்கு மாற்றம் செய்து ஸ்ரீவில்லி புத்தூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

கல்வித்துறை அலுவலர்களிடம் பணம் பிடிபட்ட வழக்கு திருநெல்வேலி ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், அவரது நேர்முக உதவியாளர் செல்வராஜா, மற்றும் இளநிலை உதவியாளர் சாணக்கியன் ஆகியோரிடம் இருந்து ₹3.13 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

2023 நவம்பர் 7 அன்று நடந்த சோதனையில், செல்வராஜாவிடமிருந்து ₹13 ஆயிரம், ராமன் வீட்டிலிருந்து ₹3 லட்சம் கணக்கில் வராத பணமாக கைப்பற்றப்பட்டது.

பணம் லஞ்சமாக பெறப்பட்டதாக நிரூபிக்க நேரடி சாட்சிகள் இல்லாததால், ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயம் மூலம் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை செயலர் பரிந்துரைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை ஏற்று, வழக்கை திருநெல்வேலி ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.


Case of money seized from education department officials Transferred to Disciplinary Tribunal

The Srivilliputhur Principal District Court has ordered the transfer of the case in which Rs 3 lakh 13 thousand was seized from Virudhunagar Chief Education Officer Raman, his personal assistant Selvaraja, and junior assistant Sanakyan by the Virudhunagar Anti-Corruption Police, to the Tirunelveli Disciplinary Tribunal.

During a search by district anti-corruption police at the Virudhunagar District Chief Education Officer's office on Nov. 7, 2023, Rs 13 thousand was seized from the then personal assistant Selvaraja, and Rs 3 lakh in unaccounted cash was seized from the house of Chief Education Officer Raman.

The anti-corruption police registered a case against the 3 persons in this regard. The case was heard at the Srivilliputhur Principal District Court.

As there were no direct witnesses or documents to prove that the money was received as a bribe in the name of book festival donation from the management of government aided schools without the Collector's permission, the School Education Department Secretary had ordered that action could be taken through the Disciplinary Tribunal based on the investigating officer's recommendation.

Accepting this order, Srivilliputhur Principal District Judge Jayakumar ordered the transfer of the case to the Tirunelveli Disciplinary Tribunal.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.