பணியை காக்கவும், பணியில் சேரவும் ஒன்றாக தேர்வு எழுத வந்த தந்தை-மகன் : ஆசிரியர் தகுதித்தேர்வில் நெகிழ்ச்சி சம்பவம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 17, 2025

பணியை காக்கவும், பணியில் சேரவும் ஒன்றாக தேர்வு எழுத வந்த தந்தை-மகன் : ஆசிரியர் தகுதித்தேர்வில் நெகிழ்ச்சி சம்பவம்

பணியை காக்கவும், பணியில் சேரவும் ஒன்றாக தேர்வு எழுத வந்த தந்தை-மகன் : ஆசிரியர் தகுதித்தேர்வில் நெகிழ்ச்சி சம்பவம்

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. நெல்லையில் ப மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடந்த நிலையில் நிலையில், இன்று பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான டெ தேர்வு மாவட்டத்தில் 35 மையங்களில் நடைபெற்றது.

இந்த தேர்வுக்காக நெல்லை மாவட்டத்தில் 157 மாற்றுத்திறனாளிகள் உள்பட 11 ஆயிரத்து 640 பேர் விண்ணப்பித்திருந்தனர். இன்று காலை முதலே தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் னர். அவர்கள் கடுமையான சோதனை களுக்கு பின்னரே மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வரத்தொடங்கி செத்தர் அனுமதிக்ங்களில்

தேர்வு மையங்களில் ஒன்றான பாளையங் கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக பட்டதாரி தமிழ் ஆசிரியர் ஒருவர் தகுதித்தேர்வு எழுதுவற்காக தனது மகனுடன் தானும் சேர்ந்து வந்த சம்பவம் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இதுபற்றிய விபரங்கள் வருமாறு:-

மாவட்டம் நெல்லை கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் உமர் பாருக் (வயது 50). இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை 3 யில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 7 தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மத்திய அரசின் கல்விக்கொள்கை மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 2011-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனை ஆசிரியர்கள் வரும் கட்டாயமாக தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரண மாக இந்த தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளார்.

இவருடன் புதிதாக ஆசிரியர் பணியிடத்தை பிடிக்கும் வகையில் அவரது மகன் தானிஷ் (22) என்பவரும் இன்றைய தேர்வு வினாத்தாள்-2 ஐ எழுதுவதற்காக அதே மையத்திற்கு தந்தையுடன் வந்தார்.

இதுகுறித்து ஆசிரியர் உமர் பாரூக் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனக்கு 50 வயதாகிறது. எனது மகனும் இன்று தகுதித்தேர்வை எழுதுகிறார்.

தந்தையாகிய நானும், மகனும் ஒரே நேரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவது ஒருபுறம் நெருடலாக இருந்தாலும், மறுபுறம் உற்சாகமாக உள்ளது.

எனது மகன் 10-ம் வகுப்பு படித்தபோது, நான் அவனுக்கு வகுப்பாசிரிய ராக இருந்தேன். இன்று அதே மகனுடன் சக ஆசிரியராகும் வாய்ப்புக்கு தேர்வு எழுத வந்துள்ளேன். இதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

தற்போது பணியில் இருக்கின்ற 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் இந்த தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய கல்வி மந்திரிக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். தேர்வெழுதும் அவரது மகன் தானிஷ் பேசுகையில், என் அப்பா எனக்கு வகுப்பாசிரியராக இருந்தார். அவரை ஒரு மாடலாக எடுத்துக்கொண்டு, அவருக்கு ஈடாக ஒரு சக ஆசிரியராக ஆகப்போகி றேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்றார்.

ஒருபுறம் இருக்கும் பணியை காப்பாற்ற தந்தையும், மறுபுறம் புதிதாக அரசு பணியை எட்டிப்பிடிக்க மகனும் சேர்ந்து தேர்வு எழுதவந்த சம்பவம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

தேர்வு எழுத வந்த தந்தை உமர் பாரூக்-மகன் தானிஷ்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.