பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை
பணி நிரந்தரம் எதிர்பார்த்து காத்துள்ள பகுதி நேர ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கை, சட்டசபையில் எதிரொலிக்க வேண்டும்' என, தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், 'பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என, வாக்குறுதி அளித்திருந்தது.
தமிழக அரசுப்பள்ளிகளில், 12 ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர் அறிவியல், தையல், இசை, தொழில் கல்வி பாடங்களை பகுதி நேர ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். அதேநேரம் ஓவியம், கம்ப்யூட்டர், தையல் மற்றும் இசை பயிற்றுவிக்கும் சிறப்பாசிரியர்கள், 20 ஆயிரத்து 600 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறுகின்றனர். 'ஒரே கல்வித்தகுதியுடைய ஒரே பாட ஆசிரியர்களுக்கு, சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
எனவே, 14 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில், பகுதிநேர ஆசிரியர்களாக இணைந்தவர்களை பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது சட்டசபை கூடியுள்ள நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம், பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். சட்டசபையில், இக்கோரிக்கையை எதிர்க்கட்சியின் எழுப்பி, கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்? மறந்து போன தி.மு.க. வாக்குறுதி
உடுமலை. அக். 144 குறுதி அடிப்படையில், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய சட் டசபையில் சிறப்பு சட்டம் தாக்கல் செய்ய வேண்டும் என. தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பி னர் வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசு, 2012ல், அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கம்ப் யூட்டர் சயின்ஸ், தையல், இசை தோட்டக்கலை. கட்டடக்கலை வாழ்க் கைக்கல்வி பாடங்களை கற்பிக்க பகுதி நேர ஆசிரி யர்களை நியமித்தது.
இதுவரை பகுதி நேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப் படாமல், மிகுந்த சிரமப் பட்டு வருகின்றனர். இது குறித்து, தமிழ் நாடு பகுதிநேர ஆசிரியர் கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந் 16 தில்குமார் அரசுக்கு அனுப் பியுள்ள மனு: கடந்த, 2012ல், ஆயிரத்து 549 பேர் பகுதிநேர ஆசி ரியர்களாக ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிய மிக்கப்பட்டார்கள். சம் பள உயர்வு பின்னர் படிப் படியாக உயர்த்தப்பட்டு, ரூ.10 ஆயிரம் சம்பளம் தொகுப்பூதியமாக வழங் கப்பட்டது.
இவர்களில் இதுவரை மரணம், பணி ஓய்வு என சுமார் 5 ஆயிரம் பேர் காலி யிடங்கள் ஏற்பட்டுள்ளது; 12 ஆயிரம் பேர் வரை தொடர்ந்து பணி செய்து வருகின்றனர்.
இவர்களில் உடற்கல்வி மற்றும் ஓவியம் தலா 3,700 பேரும்,சும்ப்யூட்டர் சயின்ஸ் 1700; தையல், 300: இசை, 200 பேர் என பகுதிநேர ஆசிரியர்களாக இருந்து கற்பித்து வருகின் றார்கள்.
2021 சட்டசபை தேர்த லின் போது தி.மு.க.. ஆட் சிக்கு வந்தால், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்த ரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி கொடுக் கப்பட்டது.
பணி நிரந்தரம் செய் யவில்லை. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகே சம்பள உயர்வு, 2,500 ரூபாய் மட்டும் கடந்த 2024ல் வழங்கப் பட்டது.
சம்பள உயர்வு வழங் கினாலும், தி.மு.க., ஆட் சியிலும் மே மாதம் சம்ப ளம், போனஸ், தீபாவளி பண்டிகை கடன், மருத் வைப்பு நிதி, மரணம் துவ காப்பீடு, வருங்கால அடைந்த குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க வில்லை என்ற ஒரு குறை. பகுதிநேர ஆசிரியர்கள் மத் தியில் நிலவி வருகிறது.
இந்த காலத்தில், 12 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தை வைத்துக் கொண்டு, குடும்பத்தை நடத்த முடியாமல் வாழ் வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளார்கள்.
ஒரே கல்வி தகுதியு டைய, ஒரே பாட ஆசிரி யர்களுக்கு, சம வேலை, சம ஊதியம் வழங்க வேண் டும் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த கோர்ட் உத்தரவை அமல்படுத்த. பல முறை அரசுக்கு வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
எனவே நடப்பு சட்ட சபை கூட்டத்தொடரில், சிறப்பு சட்டம் தாக்கல் செய்து முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந் தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழகத்தி லுள்ளபிற கட்சிகளின் ஆக ரவையும், பகுதி நேர ஆசிரி யர்கள் கோரியுள்ளனர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.