8வது சம்பள கமிஷனுக்கு உறுப்பினர்கள் நியமனம்...மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் - 18 மாதங்களில் அறிக்கை அளிக்க அறிவுறுத்தல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியடையும் வகையில், எட்டாவது சம்பள கமிஷன் உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 18 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
மானிய விலையில் உரங்கள் மத்திய அரசு ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட் டத்தில், ராபி பருவ கால சாகுபடி உரங்களுக் கான புதிய மானிய விகிதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நடப்பாண்டு பருவத்திற்காக, 'பாஸ்பட்டிக்' மற்றும் 'பொட்டாஷியம்' உரங்களுக்கு ஊட்டச்சத்து சார்ந்த மானிய விலையை மத்திய உரங்கள் துறை நிர்ணயித் தது. இது தொடர்பான கருத்துரு மத்திய அர சிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் தரப்பட்டது.
மலி இதன் மூலம் வேளாண் தொழிலுக்கு தேவையான முக்கிய உரங்கள் மற்றும் இடுபொருட்கள், விவசாயிகளுக்கு வான விலையில் கிடைக்கும். ராபி பருவத் திற்கான தற்காலிக நிதி தேவை, 37,952.29 கோடி ருபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இது கடந்த காரிப் பருவ சாகுபடிக்கான நிதி தேவையை விட, 736 கோடி ரூபாய் அதிகம்பணவீக்கம், பொரு வாதார வளர்ச்சி மற்றும் வேலை பொறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மத்திய அரசு ஊழி யர்களின் சம்பளம், படி கள் மற்றும் பிற சலு கைகளை மறு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க, சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது.
அந்த வகையில் சுடை சியாக, 2014 பிப்ரவரி யில் ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கப்பட் டது. அதன் பரிந்துரை கள், 2016 ஜன., 1 முதல் அமல்படுத்தப்பட்டன.
பரிந்துரை
பொதுவாக 10 ஒவ் ஆண்டுக வொரு, ளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்படு கிறது. அதன்படி, ஏழா வது சம்பள கமிஷனின் பதவி முடிவுக்கு வருவ தால், எட்டாவது சம்பள கமிஷன் உறுப்பினர்கள் நியமனத்திற்கும், அதன் பரிந்துரை விதிமுறைக ளுக்கும் மத்திய அமைச் சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்ச ரவை கூட்டத்தில் இதற் முக்கிய முடிவு கான எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
மத்திய அரசு அமைத் துள்ள எட்டாவது சம்பன கமிஷனின் பரிந்துரைகள் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 6லட்சம் ஓய்வூதியதாரர் கள் பலன் பெறுவர்.
மத்திய அரசு ஊழியர் களின் சம்பளம், படிகள் மற்றும் பிற சலுகைகளை தற்போதைய பணவிக் சுத்திற்கு ஏற்ப ஆய்வு செய்து, எட்டாவது சம் பன கமிஷன் தன் பரிந்து ரைகளை சமர்ப்பிக்கும்.
சம்பன கமிஷன் அமைக்கப்பட்ட நாளில் இருந்து. 18 மாதங்களுக் குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். தேவைப்பட்டால் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்வது குறித் தும் பரிந்துரைக்கப்படும். எட்டாவது சம்பள கமி ஷன், 2026 ஜன., 1 முதல் செயல்படத் துவங்கும்.
இவ்வாறு கூறினார்.
அவர் மத்திய அரசு அமைத் துள்ள எட்டாவது சம் பள கமிஷன், தற்காலிக அமைப்பாக செயல் படும். இந்த கமிஷ னுக்கு, உச்ச நீதிமன்றத் தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். Appointment of members to the 8th Pay Commission...Approved in the Union Cabinet meeting - Instructions to submit a report within 18 months
மறுசீரமைப்பு
கடந்த காலங்களில் மத்திய அரசு அமைத்த பல்வேறு குழுக்களுக்கு இவர் தலைவராக செயல் பட்டுள்ளார்.
குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தொகுதி மறுசீரமைப்பு கமிஷளின் தலைவராக வும், உத்தரகண்ட் பொது சிவில் சட்ட வரைவு கமிட்டியின் நிபுணராக வும் பணியாற்றியவர்.
பெங்களூ ரூ. ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவன பேரா சிரியர் புலக் கோஷ் பகுதிநேர உறுப்பினரா கவும், பெட்ரோலிய அமைச்சகத்தின் செயலர் பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலராக வும் நியமிக்கப்பட்டு உள்ளனர்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.