Teachers cannot be held criminally liable for using a cane to correct students - High Court orders - மாணவர்களை திருத்துவதற்காக ஆசிரியர்கள் பிரம்பை கையில் எடுப்பதை குற்றமாக கருத முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களை திருத்துவதற்காக ஆசிரியர்கள் பிரம்பை கையில் எடுப்பதை குற்றமாக கருத முடியாது - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரள மாநிலம் பாலக் காடு மாவட்டம் வடக் காஞ்சேரியில் ஒரு நடு நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் அடிதடி மோதலில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் பைப்பால் அவர்கள் ஒருவரை ஒரு வர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து அறிந்தஆசி ரியர் ஷாஜி அவர்களை விலக்க முயற்சித்தார். ஆனால் மாணவர்கள் தாக் குதலை நிறுத்தாததால் ஆசிரியர் பிரம்பால் அவர் களை காலில் அடித்துள் ளார். இதன்பிறகே அந்த மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந் நிலையில் தன்னுடைய மகனை தாக்கிய ஆசிரியர் ஷாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவ னின் தந்தை வடக்காஞ் சேரி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நி லையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆசி ரியர் ஷாஜி கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை விலக்கி விடுவதற்காகத் தான் அவர்களை பிரம்பால் காலில் அடித்ததாகவும், வேறு எந்த நோக்கமும் தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரதீப்குமார், ஆசிரி யர் ஷாஜி மீது பாலக்காடு கூடுதல் செஷன்ஸ் நீதிமன் றத்தில் நடைபெற்று வந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் கூறியிருந்த விவ ரங்கள் வருமாறு: மாண வர்களை திருத்துவதற்கா கத் தான் ஆசிரியர்கள் தண்டனை கொடுக்கிறார் கள் என்றால் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்க னவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே மாணவர்களை திருத்துவ தற்காகவும், பள்ளியில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவ தற்காகவும் ஆசிரியர்கள் பிரம்பை பயன் படுத்து வதை குற்றமாக கருத முடி யாது ஆசிரியரின் இந்த நல் லெண்ணத்தை பெற்றோர் புரிந்து கொள்ளாதது துர திர்ஷ்டவசமானதாகும் என்று கூறியுள்ளார்.


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.