2708 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப உத்தரவு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
2708 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் உத்தரவு - TRB மூலம் விரைவில் தேர்வு செய்யப்படுவர் என தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
உயர்கல்வியில் தமிழ்நாடு என்றென்றும் முதன்மை இடத் திகழ பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நமது மாண்புமிகு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள் -
மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் அறிவிப்பு
உயர்கல்வியில் தமிழ்நாடு என்றென்றும் முதன்மை இடத்தில் திகழ பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-
மருத்துவமும் உயர்கல்வியும் தனது இரு கண்களாகக் கொண்டு ஒவ்வொரு நாளும் அதன் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். உயர்கல்வியில் நமது மாணாக்கர்கள் என்றென்றும் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்பதற்காகவும் தொழில்நுட்பத் துறையில் உலக நாடுகளுக்கிடையே உள்ள போட்டியிலே வென்றெடுக்க நமது மாணவர்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வேலை தேடுபவராக இல்லாமல் தொழில் முனைவோராக திகழ வேண்டும் என்பதற்காக மாணாக்கர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் முதல்வராக திகழ வேண்டும் என்ற ஒரே நோக்கில்
Press News - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.