விஜய் கட்சி துப்புரவு செய்த பள்ளி ஹெச்.எம்., இடமாற்றம்
தென்னிலை, அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த துாய்மை பணி குறித்து, த.வெ.க., வெளி யிட்ட வீடியோ சர்ச்சையா னதால், அப்பள்ளி தலை மையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், க.பர மத்தி ஊராட்சி ஒன்றியத் தில், தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளியில், துாய்மை பணி உள்பட பல்வேறு பணிகளை, சில நாட்களுக்கு முன், த.வெ.க., சார்பில் மேற் கொள்ளப்பட்டது. இது தொடர்பான வீடி யோக்களை, சமூக வலை தளங்களில் அக்கட்சியினர் பதிவிட்டனர். இது சர்ச்சை யானநிலையில், அந்த பள்ளி தலைமையாசிரியர் சுஜாதா சியாமளா, பணியிடை மாற் றம் செய்யப்பட்டுள்ளார்.
இது இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் செல்வ மணி வெளியிட்டுள்ள உத் தரவில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், க.பர மத்தி ஊராட்சி ஒன்றியத் தில் உள்ள, தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரிடம் இருந்து பெறப்பட்ட புகார் அடிப்படையில், மாவட்ட சமூக அலுவலர் விசா ரணை மேற்கொண்டார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், இப் பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா சியாமளா, குளித் தலை அரசு மகளிர் மேல்நி லைப் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு, அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.