முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 24, 2025

முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை



முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை

உயர் நீதி​மன்ற அறி​வுரை​யின்​படி முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வை தள்​ளிவைப்​பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரி​யம் தீவிர​மாக ஆலோ​சனை செய்து வரு​கிறது. அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள 1,996 முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர் (கிரேடு-1), கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான அறி​விப்பை ஆசிரியர் வாரி​யம் கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று வெளி​யிட்​டது. இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்​பங்​கள் ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை பெறப்​பட்​டன. முதலில் தேர்வு செப்​.28-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

ஆனால், அதே நாளில் டிஎன்​பிஎஸ்சி குருப்-2 தேர்வு நடை​பெறு​வ​தால் தேர்வு தேதி அக். 12-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், இந்த ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்​வில் கல்வி உளவியல் மற்​றும் பொது அறிவு பாடத்​திட்​டம் மாற்​றியமைக்​கப்​பட்​டிருப்​ப​தால் புதிய பாடத்​திட்​டத்​தின்​படி தேர்​வுக்கு தயா​ராக 3 வார கால அவகாசம் அளிக்க வேண்​டும் என்று சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. அந்த வழக்​கில் தீர்ப்​பளித்த நீதிப​தி​கள், முதுகலை ஆசிரியர் தேர்வை தள்​ளிவைப்​பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரி​யம் பரிசீலிக்​கலாம் என அறி​வுறுத்​தினர். இதைத்​தொடர்ந்​து, தேர்வை தள்​ளிவைக்க வேண்​டும் என்று தேர்​வர்​கள் சிலர் பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸை சந்​தித்து கோரிக்கை விடுத்​தனர். இந்​தச் சூழலில் முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் தலை​வர் எஸ்​.ஜெயந்தி தலை​மை​யில் நேற்று முன்​தினம் (திங்​கள்​கிழமை) டிபிஐ வளாகத்​தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய கூட்​டரங்​கில் நடந்​தது.

அதில், தேர்வை திட்​ட​மிட்​டபடி நடத்​து​வதா அல்​லது உயர் நீதி​மன்​றத்​தின் அறி​வுரையை ஏற்று தேர்வு தேதியை தள்​ளிவைக்​கலாமா என​ விவா​திக்​கப்​பட்​டது. பள்​ளிக்​கல்வி அமைச்​சரும் தேர்வு தேதியை தள்​ளிவைக்​கலாம் என்று அறி​வுறுத்​தி​யுள்​ள​தாக தெரி​கிறது. எனவே, முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வு தேதி தள்​ளிவைக்​கப்​படலாம்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.