அரசு பணித் தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 12, 2025

அரசு பணித் தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை

அரசு பணித் தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை

அரசு பணித் தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை

அரசு பணித் தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை

எஸ்எஸ்சி எச்சரிக்கை

புது தில்லி, செப்.12: 'அரசுப் பணி தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியி டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மத்திய அரசுப் பணி தேர்வு ஆணையம் (எஸ்எஸ்சி) எச்சரிக்கை விடுத்துள்ளது. தா இதுகுறித்து எஸ்எஸ்சி வெளியிட்ட வது:

எஸ்எஸ்சிசார்பில்தற்போதுநடத்தப்பட்டுவரும் மத்திய அரசுப்பணி களுக்கான தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் சிலர் விவா தங்களையும், ஆய்வுகளையும் மேற்கொள்வதாகவும், கேள்வித்தாள் தொடர்பாக சில பதிவுகளை வெளியிடுவதாகவும் ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது. சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையை மீறி தொடர்ந்து வினாத்தாள் தொடர்பான பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது பொதுத் தேர்வுகள் சட்டம் 2024 மற்றும் பிற கட்ட விதிகளின் கீழ் அபராதம், ஜாமீனில் வெளியே வர முடியாத வகையிலான சிறைத் தண்டனை உள்ளிட்ட நவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தச் சட்டத்தின் பிரிவு 10-இன் கீழ், இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் தனிநபர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண் டனையும், ரூ. 10 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும். இது போன்ற முறைகேடுகளை பெரிய அளவில் திட்டமிட்டு மேற்கொள்ப வர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 கோடி வரை அபராதமும் விதிக்க முடியும். அதோடு, எதிர்காலத்தில் தேர்வு எழுத முடியாத வகையில் தடையும் விதிக்கப்படும்.

எனவே, அரசுப் பணிக்கான தேர்வுகளின் புனிதத்தன்மையைக் காக்க, தடைசெய்யப்பட்ட இதுபோன்ற பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்த்து சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.