அடுத்தமாதம் சிறை நிரப்பும் போராட்டம் தயாராகும் இடைநிலை ஆசிரியர்கள்
சம வேலைக்கு சம ஊதி யம் வழங்கக் கோரி அடுத் தமாதம் (செப்.,ல்) சிறை நிரப்பும் போராட்டம் நடத் தப்படும் என இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச் செயலா ளர் ராபர்ட் தெரிவித்தார். பதவி இடைநிலை மூப்பு ஆசிரியர்கள் இயக் கத்தின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கான தென் மண்டல ஆயத்த மாநாடு, ராமநாதபுரம் மாவட்ட, வட்டார கிளைதொடக்க விழா நேற்று நடந்தது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராம நாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, புதுக் கோட்டை மாவட்ட ஆசி ரியர்கள் கலந்து கொண் டனர். மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
பொதுச்செயலாளர் ராபர்ட் கூறியதாவது:
இடைநிலை ஆசிரியர் களுக்கு ரூ.8370 அடிப் படை ஊதியம் வழங்கப்படு கிறது. ஒரே கல் வித் தகுதி, பணி கொண்டிருந்தா லும் 2009 ஜூன் 1 க்கு பின் பணி யில் சேர்ந்த ஆசிரி யர்களுக்கு அடிப் படை ஊதியம் ரூ.5200 வழங்கப் படுகிறது. ஒவ்வொரு ஊதி யக் குழுவிலும் ஊதியம் உயர்ந்தாலும் 2009 ஜூன் 1க்கு பின் பணியில் சேர்ந்த இடை நிலை ஆசிரியர்க ளுக்கு மட்டும் உயராது.
தி.மு.க., ஆட்சியில் ராபர்ட் 2009ல் ஏற்பட்ட இந்த முரண்பாட்டை நீக்க வேண்டும் என 15 ஆண் டுகளாக போராடி வருகி றோம். கடந்த ஆட்சியில் போராடும் போது தற்போ தைய முதல்வர் ஸ்டாலின் 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் ஊதிய முரண் பாடு சரி செய்யப் படும் என்றார். தற்போது வரை எந்த முடிவும் ஏற் படவில்லை.
தமிழகம் கல் வியில் சிறந்து விளங்க காரணம் இடைநிலை ஆசிரியர்கள். ஆனால் ஒரு டிரைவரின் ஊதியத்திற்கு இணையாக இடைநிலை ஆசிரியர்க ளுக்கு வழங்கப்படுகிறது. ஊதிய முரண்பாட்டை களைந்தால் அரியர் தொகை தர கூடுதல் செல விட வேண்டியிருக்கும் என அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். அரியர் வேண் டாம் என கூறியும் சம ஊதி யம் தர மறுக்கின்றனர்.
இதனை கண்டித்து செப் டம்பரில் (அடுத்தமாதம்) சிறை நிரப்பும் போராட் டம் நடத்தப்படும். ஆசி ரியர்களை சிறையில் தள் ளிய அவமானம் தமிழக முதல்வருக்கு வரக்கூ டாது. சம வேலைக்கு சம ஊதியம் கொடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். போராட்டம் விரைவில் நடக்கும் நாள், இடம் அறிவிக்கப் படும் என்றார்.
தொடர்ந்து புதிதாக துவங்கிய ராமநாதபுரம் மாவட்ட, வட்டார கிளை நிர்வாகிகள், உறுப்பினர் கள் பொறுப்பேற்றனர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.