அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ASTPF வட்டி கணக்கீடு தொடர்பாக DSE செயல்முறைகள்!
பார்வை (1)ல் காணும் கடிதத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பழைய பென்ஷன் முறையில் பணிபுரிந்து வருகின்ற ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ASTPF சார்ந்த சம்பளம் பெற்று வழங்கக்கூடிய (மாவட்ட கல்வி அலுவலகம் / மாவட்ட கல்வி அலுவலகம் தொடக்க கல்வி / வட்டார கல்வி அலுவலகம்) அவர்களால் ASTPF கணக்குத் தாள் தயாரித்து சார்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளை பொறுத்த வரை பட்டியல்களை பள்ளிச் செயலர் தயாரித்து கையொப்பமிட்டு அனுப்பப்பட்டு அதை மாவட்ட கல்வி அலுவலகம் (DDO/DEEO, BEO) மூலம் பட்டியல்கள் (PAO / TREASURY ) வழியாக சார்ந்த பணியாளருக்கு காசாக்கப்பட/வழங்கப்படுவதற்கு குறைந்த ஒரு மாத காலம் அதாவது செயல்முறை கையெழுத்து இட்ட நாளிலிருந்து அடுத்த மாதத்தில் பணியாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட முறையில் ஒரு மாத இடைவெளியில் வரவு வைக்கும் போது சுமார் ரூ 5,00,000 பெரும் பணியாளருக்கு உத்தேசமாக ரூ 2900 நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் சார்ந்த பணம் பெற்று வழங்கக்கூடிய DDO செயல்முறை நாளிலேயே கழிக்கப்படுவதால் இந்த நிதி இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே. மேற்கண்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் ASTPF கணக்குத் தாள் சார்பான கோரிக்கையினை நடைமுறையில் உள்ள விதிகள்/அரசாணைகளின் படி ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
Saturday, August 23, 2025
New
அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ASTPF வட்டி கணக்கீடு தொடர்பாக DSE செயல்முறைகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.