அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அரசாணை வெளியீடு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அங்கன்வாடிப் பணிகள் குழந்தைகள் மையங்களுக்கு 2025-ஆம் ஆண்டில் மே மாதம் 11 ஆம் நாள் முதல் 25 ஆம் நாள் வரை 15 நாட்களுக்கு கோடை விடுமுறை அளித்தல் வெளியிடப்படுகிறது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந-7(2)) துறை அரசாணை (ப) எண்.117
1. நாள்:30.04.2025
ஆணை
திருவள்ளுவர் ஆண்டு 2056 சித்திரை 17 படிக்க:-
அரசாணை (நிலை) எண்.36, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, நாள்:10.04.2018.
2. அரசாணை (ப) எண்.55, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, நாள்: 15.03.2024.
3. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும் இயக்குநரின் கடித ந.க.எண்.630/இ3(2)/2025, நாள்: 15.04.2025.
***** ஆணை:-
மேலே, முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், தமிழ் நாட்டில் அங்கன்வாடிப் பணிகளின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களான முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாவது வாரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மூன்றாம் வாரமும், குறு அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு நான்காவது வாரமும் கோடை விடுமுறை வழங்கியும், அவ்வாறு குழந்தைகள் மையங்களில், கோடை விடுமுறை வழங்கப்படும் மே மாதத்தின் இரண்டாவது வாரம் அங்கன்வாடி உதவியாளர்களும், மூன்றாவது வாரம் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும், நான்காவது வாரம் அருகிலுள்ள குழந்தைகள் குறு மையங்களில் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும் மாற்றுப் பணியில் பயனாளிகளுக்கு உணவூட்டும் பணிகளை எவ்விதமான இடையூறுமின்றி நிறைவேற்றும்படியும், அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மே மாதத்தில் விடுமுறை வழங்கும் பொழுது உணவூட்டும் பணிகளை மாற்று ஏற்பாட்டுடன் மேற்கொள்ளும்பொழுது அரசின் கொள்கை முடிவின்படி ஆண்டு முழுவதும் குழந்தைகள் மையங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்கு உரிய . 2 நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.
2. மேலே, இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், ஏனையவற்றுக்கிடையே, மேலே முதலாவதாக முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையை 2024-ம் ஆண்டிற்கு நிறுத்தி வைத்தும், 2024-ஆம் ஆண்டில் மே மாதம் 8-ஆம் நாள் முதல் 22-ஆம் நாள் முடிய 15 நாட்களுக்கு குழந்தைகள் யைங்களுக்கு கோடை விடுமுறை அளித்தும், மைய அரசின் நெறிமுறைகளின்படி.
அங்கன்வாடிப் பணிகளின் கீழ் இணை உணவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாலும், உலர் உணவுப் பொருட்கள் வழங்க வழிவகை இல்லை என்பதாலும், மேற்கண்ட கோடை விடுமுறைக் காலங்களுக்கு 2 முதல் 6 வயதுக்குட்பட்ட முன்பருவக் கல்வி பயிலும் மையக் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினை கணக்கிட்டு 15 நாட்களுக்கு 750 கிராம் சத்துமாவை கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்னர், வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் (THR) மேற்கண்ட பயனாளிகளுக்கு வழங்க அனுமதி அளித்தும் ஆணையிடப்பட்டுள்ளது.
மேலே, மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர், 2024-ஆம் ஆண்டில் குழந்தைகள் மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது போன்று இவ்வாண்டும் குழந்தைகள் மையங்களுக்கு மே மாதம் 11-ஆம் நாள் முதல் 25-ஆம் நாள் முடிய 15 நாட்களுக்கு கோடை விடுமுறை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
4. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது:- i. மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணை இவ்வாண்டிற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.
11. கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில், நடப்பாண்டில் (2025) மே மாதம் 11 ஆம் நாள் முதல் 25-ஆம் நாள் முடிய 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
மைய அரசின் நெறிமுறைகளின்படி அங்கன்வாடிப் பணிகளின் கீழ் இணை உணவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாலும், உலர் உணவுப் பொருட்கள் வழங்க வழிவகை இல்லை என்பதாலும், மேற்கண்ட கோடை விடுமுறைக் காலங்களுக்கு 2 முதல் 6 வயதுக்குட்பட்ட முன்பருவக் கல்வி பயிலும் மையக் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினை கணக்கிட்டு 15 நாட்களுக்கு 750 கிராம் சத்துமாவை கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்னர், வீட்டிற்கு iv. எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் (THR) மேற்கண்ட பயனாளிகளுக்கு வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
மே மாதத்தில் குழந்தைகளின் வருகை 50 விழுக்காடு மட்டுமே இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுவதன் அடிப்படையில், அந்த அளவிற்கு மட்டும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் தேவை ஏற்படின் அதுகுறித்து தனியே பரிசீலிக்குமாறு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநரைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD GO NO 117 SW&WE DEPT - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.