UDISE PLUS பணிகளை விரைந்து முடித்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 6, 2025

UDISE PLUS பணிகளை விரைந்து முடித்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம்!



UDISE PLUS பணிகளை விரைந்து முடித்தல்- அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம்! Letter from the State Project Director regarding the expedited completion of UDISE PLUS projects - providing advice!

UDISE இணையதளத்தில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்ந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யும் பொருட்டு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது இதன்படி தமிழகப் பள்ளிகளில் மேற்படி அனைத்து விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.

UDISE இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மேற்படி பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களின் தரம், துல்லியம் மற்றும் முழுமை (Completeness) பராமரிக்கும் பொருட்டு கீழ்க்கண்ட அறிவுரைகள் மாவட்ட UDISE குழுவிற்கு வழங்கப்படுகின்றன.

1. 2024-25 ஆம் கல்வி ஆண்டில் ஆண்டில் செயல்படாத (Non (Non Functional)-ல் தற்காலிகமாக/ நிரந்தரமாக மூடப்பட்டுள்ள தனியார் பள்ளிகளின் இயங்கு நிலை (Operational / not operetional) குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் (தனியார் பள்ளிகள்) உரிய அங்கீகாரம் பெற்று (Form Ao1) UDISE இணையதளத்தில் இயங்குநிலை (Closure) பதிவேற்றம் செய்திடல் வேண்டும். 2. 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அருகில் இருக்கும் பள்ளியோடு இணைக்கப்பட்டுள்ள (Merged) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏதேனும் இருப்பின் உரிய அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் 4.

கல்வி/மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) உரிய அங்கீகாரம் பெற்று UDISE இணையத்தளத்தில் இயங்குநிலை பள்ளிகளாக (Merged) பதிவேற்றம் செய்திடல் வேண்டும். (Form Ao1)

3. 2024-2025 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற புதுப் பள்ளிகள் (New School) UDISE இணையதளத்தில் எவ்வித விடுப்பும் இல்லாமல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்திடல் வேண்டும்.

2024-25 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் இயங்கும் (operational)

மூடப்பட்டுள்ள அருகில் உள்ள பள்ளியுடன் இணைக்கட்டுபட்டுள்ள (Closed/Merged) பள்ளிகள் அனைத்தும் எவ்வித விடுதலும் (Omission) மற்றும் இரண்டாம் படியும் (Duplication) இல்லாமல் UDISE செய்யப்பட்டுள்ளது என்பது உறுதி 5. இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

2023-2024 ஆம் கல்வி ஆண்டில் EMIS இணையத்தளத்திலிருந்து, UDISE இணையதளத்திற்கு தரவு பரிமாற்றம் செய்யப்படும் போது (Data Transfer) பள்ளிகளின் வகை (School Category) மாற்றம் ஏற்ப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேற்படி குறைகள் தகுந்த ஆவணங்களின் அடிப்படையில் UDISE இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

6. பள்ளியின் மாணவர்களின் பயிற்றுமொழி (Medium of Instruction) எவ்வித விடுதலும் இல்லாமல் இணைக்கப்பட்டுள்ளது (mapped to the particular school) என்பதனை உறுதி செய்திடல் வேண்டும்.

7. பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும் மொழிகளின் விவரம் (language options being taught) எவ்வித விடுதலும் இல்லாமல் (mapped to the particular school) இணைக்கப்பட்டுள்ளது என்பதனை உறுதி செய்திடல் வேண்டும்.

8. பள்ளியின் இணைப்பு வாரியம் (Affiliciton Board) (State/CBSE/ICSE/Cambridge) எவ்வித விடுதலும் இல்லாமல் Affiliaiton Number and Date of Affiliaiton உடன் Secondary and Hr Secondary பிரிவுகளுக்கு, அனைத்து உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். 9. பள்ளியின் அங்கீகாரம் / தரம் உயர்த்துதல் (upgradation) விவரங்கள் பள்ளியின் ஆவணங்களின்படி பதிவேற்றம் செய்வதை உறுதி செய்திடல் வேண்டும்.

10. சம்மந்தப்பட்ட பள்ளி அமைந்துள்ள LGP Block/LGD village/LGP village Panchayat (rural) மற்றும் Urban block/ward சம்பந்தப்பட்ட பள்ளிக்கு 11.

எவ்வித விடுதலும் இல்லாமல் இணைக்கப்பட்டுள்ளது (mapped to the school) என்பது உறுதி செய்திடல் வேண்டும்.

சம்பந்தப்பட்ட பள்ளி அமைந்துள்ள Assembly Constituency பள்ளிக்கு இணைப்பு செய்யப்பட்டுள்ளது என்பதனை உறுதி செய்திடல் வேண்டும். 12. குறிப்பிட்ட பள்ளிகளின் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் Vocational Education under NSQF Scheme பாடங்கள் அப்பள்ளியின் இணைக்கப்பட்டு மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதனை உறுதி செய்யப்பட வேண்டும்.

13. இக்கல்வி ஆண்டில் (2024-25) குறிப்பிட்ட பள்ளியில் குறிப்பிட்ட மாணவர் சேர்க்கை பெற்று கல்வி ஆண்டின் இடையில் (Middle of the Acedemic year) வேறு பள்ளிக்கு சென்றுவிட்டால் (left the school) சம்பந்தப்பட்ட மாணவர்களின் விவரங்களை உடனடியாக Dropbox தொகுப்பிற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள் அனுப்பி இருப்பதை உ றுதி செய்திடல் வேண்டும். மாணவர்கள் சேர்க்கை பெற்ற பள்ளிகள் பள்ளிகள் சம்பந்தப்பட்ட மாணவர்கள் விவரங்களை Import செய்துகொள்ள ஏதுவாக எவ்வித தாமதமும் இல்லாமல் உடனடியாக Dropbox அனுப்பிட வேண்டும்.

14. இக்கல்வி ஆண்டில் (2024-25) வெளி மாநில, மாவட்டப் பள்ளிகளில் பயின்று கல்வி ஆண்டின் இடையில் (Middle of the Acedemic year) குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்கை பெற்றிருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் விவரங்களை மாணவர் பயின்ற முந்தைய பள்ளியிலிருந்து (Previous school studied) தொகுப்பிற்கு அனுப்புவதற்கு ஏதுவாக மாநில அலுவலகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள Google form-ல் பதிவேற்றம் செய்திடல் வேண்டும் 15. எனவே, மேற்கண்ட UDISE முக்கிய அடிப்படை பணிகளை விரைந்து செய்து முடித்திட ஏதுவாக மாவட்ட UDISE குழுவிற்கு தகுந்த அறிவுரைகள் வழங்குமாறும், மேற்படி பணிகளை 09.04.2025-க்குள் முடிக்குமாறும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD UDISEplus work SPD ltr PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.